வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

அவுஸ்திரேலியாவின் டார்வின் வானூர்தி நிலைய அகதிமுகாமில் மோதல் - 5 பேர் காயம்!

அவுஸ்திரேலியாவின் டார்வின் வானூர்தி நிலைய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 5 இலங்கை அகதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதும், அவர்கள் எந்த நாட்டினர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் காவற்துறையினரின் தலையீட்டைத் தொடர்ந்து மோதல் விரைவாக தணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை, குவைட் மற்றும் ஈராக்கிய அகதிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில், சுமார் 40 பேர் வரையில் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அகதிகளாக அடைக்கலம் கோரியுள்ள இளைஞர்களுக்கு இடையிலேயே இந்த மோதல்கள் இடம்பெறுவதாக அவுஸ்திரேலிய அகதிகள் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினமும் இலங்கையர்கள் உட்பட்ட அகதிகளை ஏற்றிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல