வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

மலேசிய பொலிஸாருக்கு தண்ணி காட்டியவர் இந்திய பொலிஸாரின் வலையில்!

கடந்த 2004ம் ஆண்டு சிங்கப்பூருக்கு போதை பொருள் கடத்திச் சென்று அங்குள்ள பொலிஸாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பியோடியவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை நாட்டுப் பிரஜையான ஜரேமி மகான் சண்முகம் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை கைது செய்ய உதவும்படி சர்வதேச பொலிஸாரை சிங்கப்பூர் பொலிஸார் கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்யும்படி அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச பொலிஸார் அறிவித்தல் கடிதம் அனுப்பினர்.

இந்த நிலையில், நேற்று மும்பை விமான நிலையத்தில் சி.பி.ஐ.யின் சர்வதேச பொலிஸார், சண்முகத்தை கைது செய்துள்ளனர். இது பற்றி இந்திய சி.பி.ஐ. அதிகாரிகள் சிங்கப்பூர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல