சூடான் பாணியிலான சர்ஜன வாக்கெடுப்பு இலங்கையிலும் நடத்தப்பட வேண்டுமென அக்ட் நௌவ் என்ற பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய மனிதாபிமான தொண்டுப் பணியாளர் ஒருவர் நான்காம் கட்ட ஈழப்போரில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளினால் 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுடன் தொடர்புடைய குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் யுத்தத்தின் பின்னரான இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக ஆங்கில ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
அண்மையில் ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உரையாற்றிய போது பொதுமக்கள் இழப்பு தொடர்பில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அக்ட் நௌவ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரிம் மார்டின் என்ற பணியாளர் பான் கீ மூனிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40,000 பேர் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் சூடானில் நடைபெற்றதனைப் போன்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனவும், அதற்கு பான் கீ மூன் ஏற்பாடு செய்வாரா எனவும் ரின் மார்டின் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், அக்ட் நௌவ் போன்ற அமைப்புக்களின் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை ஏற்றுக்கொள்ளாது என இலங்கை அரசாங்கத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
7000 பேர் கொல்லப்பட்டதாக வெளியாக தகவல்களை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தற்போது 40000 பேர் கொல்லப்பட்டதாக போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்த அக்ட் நௌவ் அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக