சனி, 5 பிப்ரவரி, 2011

தவறவிட்ட சீரியலை தவறாமல் கண்டுகளிக்க ஒரு தளம்

மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட நிகழ்வுகளாக, சின்னத்திரையில் காட்டப்படும் சீரியல் நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன. தங்களின் அன்றாடச் செயல்பாடுகளை, இந்த தொடர் திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது பலரின் வழக்கமாகிவிட்டது.

தொலைபேசியில் ஒருவரைத் தொடர்பு கொள்ள எண்ணுபவர்கள் கூட, அவர் இந்நேரம் இந்த சீரியல் பார்த்துக் கொண்டிருப்பார். டிஸ்டர்ப் செய்திட வேண்டாம் என்று பார்ப்பது கூட ஒரு பண்பாட்டுச் செயலாக மாறி வருகிறது. வேலைப் பளு காரணமாக, அல்லது திருமணம், வரவேற்பு, விருந்தினர் வருகை காரணமாக சீரியல் பார்க்க இயலவில்லை எனில், பலருக்கு அது இரத்த அழுத்தத்தினை உண்டு பண்ணும் அளவிற்கு மக்கள் இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு ஒன்றிவிட்டனர்.

இவர்களுக்கு உதவுவதற்காகவே, இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது. தமிழ்ச் சேனல்களில், பிரபலமான சேனல்களில் காட்டப்படும் சீரியல்களைப் பதிந்து வைத்திடும் தளம் ஒன்று உள்ளது. இதன் முகவரி www.tamilstuffs.com நீங்கள் பார்க்கத் தவறிய சீரியல் காட்டும் சேனலை, இந்த தளம் சென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், குறிப்பிட்ட தேதியைக் கிளிக் செய்திடுங்கள்.

அன்று அந்த சேனலில் காட்டப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பட்டியலுக்குச் செல்லுங்கள். நீங்கள் பார்க்க விரும்பிய சீரியல் மற்றும் நிகழ்ச்சி மீது கிளிக் செய்தால், உடனே இயங்கத் தொடங்கி சீரியல் அல்லது அந்த நிகழ்ச்சி முழுவதும் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு என்றால், தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அநியாயத்திற்கு விளம்பரங்கள் வந்து நம் பொறுமையைச் சோதிக்கும். இதில் விளம்பரங்கள் கட் செய்யப்பட்டுக் கிடைக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தளம் அப்டேட் செய்யப்படுவதாகத் தகவலும் இங்கு தரப்படுகிறது. பரவாயில்லையே! என்று ஆச்சரியப்படுகிறீர்களா!! பார்த்து மகிழுங்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல