சனி, 5 பிப்ரவரி, 2011

மொகஞ்சதாரோ: அழிந்து போனோரின் நகரம்

உலகில் முதல் முதலில் உயிர்கள் எங்கே தோன்றியிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதனை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவன் எப்படி உருவானான்? எங்கே உருவானான்? என்கிற ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போது “உலகின் நடு மையப் பகுதியும் நிலநடுக் கோட்டிற்கு ((Equator) அருகில் இருந்திருக்கும் பகுதியில் முதலில் சூடு குறைந்து இறுகி வெட்ப தட்ப விளைவுக்கு ஏற்ப உயிர் தோன்றக் கூடிய இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் குமரிக் கண்டத்தில் முதன் முதலாக உயிர்கள் தோன்றியிருந்த போது ஆபிரிக்க, அவுஸ்திரேலியா, கிழக்கிந்தியத் தீவுகள் உட்பட இந்நிலப்பரப்பு பகுதிகள் ஒன்றாக இணைந்திருந்தன என்றும் உயிர்கள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இப்பெரும் நிலப்பரப்பு சிதைந்து போயிருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.
கி.மு. 10.000 முதல் கி.மு. 5.000 – வரையில் மனித இனங்கள் தோன்றி பல்வேறு இடங்களில் பரவலாயின என்றும் தெரிவித்த போது ஆதாரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.1922 ல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் மொகஞ்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

‘மொகஞ்சதாரோ’ என்றால் அழிந்து போனவர்களின் நகரம் என்ற பொருள் கொண்டது.
மொகஞ்சதாரோ தார்ப்பாலை வனத்திற்கு மேற்கிலும், பலுச்சிஸ்தானத்திற்குக் கிழக்கிலும் பஞ்சாப் மாநிலத்திற்கு தெற்கிலும், கட்சு வளைகுடாவிற்கு வடக்கிலும் உள்ள நிலப்பரப்பு.

இதன் மொத்த அளவு 53.000 மைகல்கள். இதில் ராஜஸ்தானிலுள்ள கலிபங்கள் என்னும் இடத்திலும், குஜராத்திலுள்ள லோதால் என்னும் இடத்திலும் வாழ்ந்த பண்டைய மக்கள் திராவிடர்கள் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.

தொல்லியலாளர்களால் திராவிடர்களின் வரலாற்றை 5 வகையாகப் பிரித்திருக்கின்றனர்.

1. கோண்டுவானாக் காலம் அல்லது முந்து லெமுரியாக் காலம்.

2. லெமுரியாக் காலம்.

3. குமரிநாட்டுக் காலம்

4. மொகஞ்சதாரோ காலம்

5. நாவலந்தேய காலம்

இதில் குமரிக்கண்ட காலம் கி.மு. 10.000 முதல் கி.மு. 5000 வரை என்கின்றனர்.

இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைந்திருந்த சிந்து நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்த திராவிடர்களின் வாழ்க்கை முறைகள் குறித்தும் இன்றும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன.இவர்கள் (திராவிடர்கள்) மண்பாண்டங்கள், வெள்ளி, தங்க நகைகள், எடை பார்க்கும் தராசு- எடைக்கற்கள், நிலங்களில் பயிர் செய்தும் வந்திருக்கின்றனர்.

சிந்துவெளி எழுத்துக்களாக மீன், கட்டடங்கள், நாய், கோழி, வாத்து, வண்டு, மனித உருவம் போன்ற வடிவங்களை கொண்டிருக்கிறது. சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்தவர்கள் 234 எழுத்துக் குறியீடுகள் உள்ளதாக சொல்கின்றனர்.நகரங்கள், கிராமங்களாக இருந்த மொகஞ்சதாரோ நகர வடிவமைப்புகளும் சீரான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிந்து நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாகவும், நில அதிர்ச்சி போன்ற இயற்கை பேரழிவுகளாலும் மொகஞ்சதாரோ நாகரிகம் பலமுறை அழிவுற்று அடுக்கு அடுக்கான மண்மேடுகளால் மூடப்பட்டு மறைந்தன என்றும் சுமார் 400 நகரங்கள் இப்படி அழிந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

40 ஹெக்டயர் நிலப்பரப்பளவில் பரவியுள்ள மொகஞ்சதாரோ இடத்தில் இதுவரை மூன்றில் ஒரு பாகம் மட்டுமே தொல்லியலாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பண்டைய பாபிலோன், எகிப்திய நாகரிங்களை விட மிகவும் பழமையானதும், மேலானதுமாகும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மொகஞ்சதாரோ ஹரப்பாவில் வாழ்ந்த பண்டைய மக்கள் மனித இனத்தில் மிகவும் நாகரிகத் தேர்ச்சி பெற்று மனித நல மேம்பாட்டைக் கொண்டதாக இருக்கிறதாக குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள் யுனெஸ்கோ, பாகிஸ்தான் இணைந்து மொகஞ்சதாரோவில் இருக்கும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத இடங்களை பாதுகாக்கவும் தொடர்ச்சியான ஆராய்ச்சியில் ஈடுபடவும் தீவிர ஆர்வங்காட்டி வருகின்றனர்.

மொகஞ்சதாரோ பகுதியை அழியாமல் பாதுகாக்க 16 இலட்ச டொலர் செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டு தொடர்ச்சியாக அப்பகுதிகளில் ஆய்வுகள் இன்னமும் நடந்து வருகின்றன.இந்தியா முழுவதும் பரவி இருந்த திராவிடர்களின் நிலப்பரப்புகள் ஆரியர்களின் வரவுக்கு பிறகு எதிர்கொண்ட இனப்போராட்டங்களும், கலாசார மாற்றங்களும், ஆரியர்களுக்கு எதிராக போராடிய திராவிடர்கள் கொல்லப்படும், வன்முறைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தெற்கு பகுதியை நோக்கி இடப்பெயர்வு கொண்டதும் என அந்த வரலாறு நீண்ட அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல