சனி, 5 பிப்ரவரி, 2011

குவைத்தில் கொள்ளை: இலங்கை காதல் ஜோடி கைவரிசை

குவைத்தின் கையிபானில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் குவைத்திலிருக்கும் இலங்கைப் பணிப்பெண்ணும் அவருடைய இலங்கைக் காதலனும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாக குவைத்தின் குற்றத் தடுப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கைப் பணிப்பெண் தான் பணிபுரிந்த வீட்டில் தன்னுடைய காதலனுடன் இணைந்து 8000 குவைத் தினார் பெறுமதியான தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த சம்பவம் குறித்து கயிபான் பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டதுடன், முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு குவைத் தலைநகர் குற்றத் தடுப்புத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கொள்ளைச் சம்பவம் குறித்து இலங்கைப் பணிப்பெண்ணும் அவருடைய காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக குவைத் குற்றப் தடுப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல