திங்கள், 7 பிப்ரவரி, 2011

சுமோ ‌போட்டிகளில் சூதாட்டம் : ஜப்பானியர்கள் அதி்ர்ச்சி

சூதாட்டப்புகார் எழுந்ததால் ஜாப்பானின் புகழ்பெற்ற விளையாட்டான சுமோ எனும் மல்யுத்த போட்டிகள் இந்தாண்டு நடக்கவிருந்ததை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுமோ சங்கம் தெரிவித்துள்ளது..

ஜப்பானின் புகழ்பெற்ற விளையாட்டு சுமோ எனும் மல்யுத்தம் ஆகும். கடந்த 65 ஆண்டுகளாக ஜப்பானில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்தது. சுமோவை ஜப்பானியர்கள் தங்களது தேசிய கலாச்சார விளையாட்டாக கருதி வந்தனர்.இந்நிலையில் கடந்தாண்டு நடந்த சுமோ போட்டியின் போது 13 சுமோ வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதையும், இவர்கள் புக்கிகளிடம் ரகசிய தொடர்பு கொண்டு 10 ஆயிரம் யுவான்கள் (1,227 டாலர்கள்) அளவுக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும் தனியார் டி.வி. படத்துடன் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

முன்னதாக சுமோ வீரர்களுக்கு கடுமையான சட்டதிட்டங்கள் உத்தரவிடப்பட்டும் இப்படி சம்பவம் நடந்துவிட்டதாக ஜப்பான் சுமோ சங்கத்தின் தலைவர் ஹானரிகோமா தெரிவித்தார். இந்தாண்டு சுமோ போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சுமோ போட்டியில் சூதாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூதாட்டப்புகார் குறித்து பிரதமர் நெளட்டோகான், ஜப்பானிய மக்களுக்கு பெரிய துரோகம் இழைத்துவிட்டது என்றார். இதற்கிடைய இந்தாண்டு மார்ச் மாதம் சுமோ போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை பெற்ற என்.எச்.கே. என்ற ஸ்போர்ட்ஸ் சானல் அதனை திரும்ப பெற்றுக்கொண்டது.

கடந்த 1945-ம் ஆண்டு தொடங்கி 65 ஆண்டுகளாக நடந்துவந்தது. சுமோ வரலாற்றில் முதன்முறையாக சூதாட்ட புகார் எழுந்துள்ளது ஜப்பானியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல