திங்கள், 7 பிப்ரவரி, 2011

மகாத்மா காந்தியின் நினைவு பொருட்கள் 13-ந்தேதி ஏலம்

மகாத்மா காந்தி கையெழுத்திட்ட கடிதங்கள் உட்பட அவருடைய 11 விதமான நினைவு பொருட்களை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒருவர் சேகரித்து வைத்திருந்தார். அவை அனைத்தும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள போனாம்ஸ் என்ற ஏல நிறுவனத்திடம் தற்போது உள்ளது. அவற்றை வருகிற 13-ந்தேதி அன்று ஏலம் விட அந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

உலகில் உள்ள பல்வேறு மதத்தலைவர்களுக்கு மதச்சகிப்பு தன்மை குறித்து காந்தி எழுதிய கடிதம், அவர் கைப்பட எழுதிய குறிப்புகள், காந்தி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை அறிக்கை, அவர் பயன்படுத்திய கதர் ஆடை ஆகியவை உட்பட 11 விதமான பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. மகாத்மா காந்தியின் 11 பொருட்களும் ரூ.15 லட்சம் வரை விற்பனையாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல