திங்கள், 7 பிப்ரவரி, 2011

செல்லப்பிராணிகளால் ஆபத்து

மனிதர்களின் அன்றாட வாழ்வில் நாய், பூனை போன்றவை செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீட்டில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகவே அவைகள் இருக்கின்றன. குழந்தைகள் போல் முத்தமிடுவது, இரவில் படுக்கையறையில் ஒன்றாகவே படுக்கவைப்பது போன்ற செயல்களில் உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

கலிபோர்னியா பல்கலை கழகம் மேற்கொண்ட ஆய்வில், செல்லப்பிராணிகளுக்கு முத்தமிடுவதாலும், படுக்கையறையில் இரவில் ஒன்றாக படுப்பதாலும் நோயை பரப்பும் தொற்றுகிருமிகள் பரவுகின்றன. முக்கியமாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.

இவ்வாறு ஏற்படும் நோய் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் அளவிற்கு கொடுமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு ஏற்படும் நோய்களுக்கு சூனோசஸ் என பெயரிட்டு அடையாளம் காட்டுகின்றனர்.மனித வாழ்வில் அன்றாடம் ஏற்படும் டென்ஷன், மனஅழுத்தம் போன்றவற்றை நீக்குவதில் செல்லப்பிராணிகள் பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வரையறைக்குள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதால், நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்பது சற்று ஆறுதலான விசயம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல