திங்கள், 7 பிப்ரவரி, 2011

இது எந்த ஊர் நியாயம்?

2 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கர் விடுதலை ஆகிறார்

2 பாகிஸ்தானியர்களை சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரியை கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான் அரசு அவரை விடுதலை செய்ய முன்வந்து உள்ளது.

3 பாகிஸ்தானியர்கள் பலி

பாகிஸ்தானில் லாகூர் நகரில் காரில் சென்ற அமெரிக்க தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தன் காரை மறித்த 2 பாகிஸ்தானியர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அவர்கள் தன்னிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அதனால் நான் சுட்டுக்கொன்றேன் என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில் அவருக்கு உதவுவதற்காக அவரை நோக்கி பாய்ந்த கார் மோதியதில் இன்னொரு பாகிஸ்தான்காரரும் பலியானார்.

கைது

கொலை சம்பவத்தில் பாகிஸ்தான் போலீசார் ரேமண்ட் டேவிசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை ரிமாண்டில் வைக்கும்படி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என்று அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதற்கு தொடக்கத்தில் செவிசாய்க்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.

இதுதொடர்பாக வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டன் அதிபர் சர்தாரியுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு அவரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு அவர் அப்போது எந்த பதிலையும் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக பிரதமர் கிலானி கூறுகையில், இந்த பிரசினை கோர்ட்டில் உள்ளது கோர்ட்டு தான் முடிவு எடுக்கவேண்டும் என்று கூறினார்.

ராணுவ உதவி கிடைக்காது

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் குழு அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் சென்று பிரதமர் கிலானியை சந்தித்தது. அப்போது ரேமண்ட் டேவிஸ் ஒரு தூதரக அதிகாரி என்ற அளவில் அவரை பாகிஸ்தான் கைது செய்ய முடியாது என்று எடுத்துக்கூறப்பட்டது. அதோடு ரேமண்ட் டேவிஸ் சிறையில் இருக்கும் வரை பாகிஸ்தானுக்கான ராணுவ உதவி, ஆயுத சப்ளை ஆகியவை கிடைப்பது கடினம் எடுத்துக்கூறினார்கள்.

இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அனுப்பிய செய்தி தான் பாகிஸ்தான் அரசை இறங்கி வர செய்தது.

தகவல் தொடர்பு துண்டிப்பு

தூதர் ஹக்கானி அனுப்பிய செய்தியில் ரேமண்ட்ஸ் டேவிசை உடனடியாக விடுதலை செய்யுங்கள். என்றும் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்று எச்சரித்து இருந்தார். இதுதான் பாகிஸ்தான் மனத்தை மாற்றியது.

பாகிஸ்தான் தூதரகத்துடனான அனைத்து தொடர்புகளையும் அமெரிக்க வெளிநாட்டு இலாகா துண்டித்து விட்டது. இதனால் பாகிஸ்தான் தூதரகம் அமெரிக்க வெளிநாட்டு இலாகா அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் பாகிஸ்தான் தூதர் ஹக்கானி பதறிப்போய் அவசரஅவசரமாக செய்தி அனுப்பினார்.

விதிவிலக்கு அளித்து விடுதலை

இதன் காரணமாக தான் பாகிஸ்தான் அரசு ரேமண்ட்ஸ் டேவிசுக்கு தூதருக்கான அந்தஸ்து அளித்து அவர் மீது பாகிஸ்தான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு விதிவிலக்கு அளித்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல