திங்கள், 23 ஜனவரி, 2012

எக்ஸெல் செல் அகலம்

எக்ஸெல் ஒர்க்புக்கில் ஒரு செல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அகலம் ஒர்க்புக்கில் வேலை யைத் தொடங்கத் தரப்படும் தொடக்க நிலைதான். இன்னும் சொல்லப்போனால் ஒர்க் புக்கில் மேற்கொள்ளப்படும் பார்மட்டிங் பணிகளில் செல்லின் அகலத்தை நம் தேவைக்கேற்ப மாற்றுவதுதான் முதன்மையான பணியாக இருக்கும். செல் ஒன்றில் தரப்படும் டேட்டா அனைத்தும் நன்றாகத் தெரியும்படி இருக்க வேண்டும் என விரும்பினால் கீழ்க்காணும் வழிகளில் செயல்படவும்.

1. நீங்கள் அட்ஜஸ்ட் செய்திட விரும்பும் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். எந்த செல்லில் அதிகமான அகலத்தில் டேட்டா தரப்பட்டு அவை காட்டப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. Format மெனுவில் இருந்து Column என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு சப் மெனுவினைக் காட்டும்.

3. இந்த சப்மெனுவில் இருந்து Autofit என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
உடனே அதில் உள்ள டேட்டா அனைத்தும் தெரியும் வகையில் செல்லின் அகலம் நீட்டப்படும்.

இன்னொரு வழியும் உள்ளது. எந்த செல்லின் அகலத்தினை அகலப்படுத்த வேண்டுமோ அதன் டிவைடிங் பாரில் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். அதாவது D என்ற நெட்டு வரிசையில் உள்ள செல்லின் அகலத்தை நீட்டிக்க D மற்றும் E நடுவே அவற்றைப் பிரிக்கும் பாரில் உங்கள் கர்சரைக் கொண்டு செல்லவும். ஒர்க் ஷீட்டின் மேலாக காலம் தலைப்பு உள்ள கிரே ஏரியாவில் காணும் டிவைடரில் இதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆட்டோ பிட் வழி சென்று அமைத்தால் நீங்கள் எந்த செல்லைத் தேர்ந்தெடுத்து இந்த வழியை மேற்கொள்கிறீர்களோ அந்த செல்லுக்கேற்றபடி அகலம் அமைக்கப்படும். இரண்டாவது வழியில் டிவைடர் மூலம் மேற்கொள்கையில் நாம் விரும்பும் வகையில் அகலப்படுத்தலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல