வேர்ட் தொகுப்பில் ஏற்கனவே பயன்படுத்திய பைல்கள் File மெனுவினைக் கிளிக் செய்தவுடன் கிடைக்கும். அடிப்படையில் இதில் நான்கு பைல்கள் காட்டப்படும். நீங்கள் திறந்து பயன்படுத்த விரும்பும் பைல் எந்த எண்ணில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று பார்த்து அந்த எண்ணை அழுத்தினாலே அந்த பைல் திறக்கப் படும். மவுஸ் கர்சரை எடுத்துச் சென்று கிளிக் செய்திடத் தேவையில்லை. இதில் நான்கு பைல் என்பதனை ஒன்பது பைல் வரை காட்டும் படி செட் செய்திடலாம். இதற்கு Tools மெனுவில் Options செலக்ட் செய்து கிடைக்கும் விண்டோவில் Genera டேப்பினைத் தட்ட வேண்டும். அதில் Recently Used File list என்று காட்டப்பட்டு ஒரு வரி இருக்கும். அதன் முன்னால் உள்ள கட்டத்தில் டிக் செய்து பின் அதன் அருகே எண்ணை அமைக்க உள்ள கட்டத்தின் மேல், கீழ் அம்புக் குறிகளைப் பயன்படுத்தியோ அல்லது எண்ணை டைப் செய்தோ நீங்கள் விரும்பும் எண்ணிக்கையில் திறந்து பயன்படுத்திய பைல்களின் எண்ணிக்கையை செட் செய்திடலாம். இது வேர்டுக்கு மட்டுமின்றி அனைத்து எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளுக்கும் பொருந்தும்.

திங்கள், 23 ஜனவரி, 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக