சனி, 21 ஏப்ரல், 2012

நாங்கள் உங்களைப் போன்று கொடியவர்கள் அல்ல - கோத்தாவின் பதிலடிக்கு கலைஞரின் சரவெடி!

தனித் தமிழீழத்துக்கானப் போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தென்சூடானைப் போல, கொசாவைப் போல, கிழக்கு திமோரைப் போல தனித் தமிழ் ஈழத்தை பொதுவாக்கெடுப்பின் மூலம் உருவாக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார்.


இதற்கு இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தனித் தமிழீழம் கோருவது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்திருந்ததாக அவர் குற்றஞ்சுமத்தினார்.தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக்கூடாது என்கிற கருத்து உடையவன் நான். என்னைத் தலைவராகக் கொண்ட தி.மு.க.வும் அதே கருத்தைத்தான் கொண்டது. நாங்கள் பயங்கரவாதத்துக்கு தயாராக இல்லை.

தமிழ் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் எதிராக இலங்கையில் சிங்களவர்களால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.

இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, இலங்கையில் இருக்கிற அரசைப்போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை. தமிழர்கள் இங்கே நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு இந்திய அரசை விட்டுப்பிரிந்துபோக வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்றார் கருணாநிதி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல