“வரலாற்றை பேணிப்பாதுகாக்காத சமூகம் வரலாற்று ரீதியாக வரும் உரிமைகளைக் கேட்க உரிமையற்றது!”எமது வரலாற்றை நாம் எமது இளம் சந்ததிக்கு முறையாக புகட்டுவதில்லை.. எமது தனித்தன்மை வாய்ந்த வரலாறு, பண்பாட்டு அடையாளங்களை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கு விட்டுச்செல்வதில்லை, அவற்றில் உள்ள பெருமைகளை அறிவு ரீதியாக
அணுகுவதில்லை..
ஆண்டுக்கொருமுறை ஏனோ தானோ என்று நினைவுவிழா கொண்டாடி, கொண்டாடுபவர்களையே விளம்பரப்படுத்தும் அரசியலே இன்று தமிழ்ர்களுள் மலிந்துள்ளது,
30.01.2012 தந்தை செல்வாவின் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் செல்வா நினைவுச்சதுக்கத்தில் இடம்பெற்றது, அவசர அவசமாக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லபடுவோர் வந்தார்கள், தாங்கள் கொண்டுவந்த மாலைகளை சிலைக்குப்போட்டார்கள், ஊடகத்தில் விளம்பரமானார்கள், சென்றுவிட்டார்கள், இனி அடுத்தவருடம் இந்த “பாட்டும், பல்லவியும்” நடைபெறும்,
செல்வாவின் சதுக்கத்தை ஒழுங்காக பராமரிப்பதாகவும், செல்வா நூதன சாலை அங்கு அமைப்பதாகவும், கடந்த ஆண்டு உறுதி வழங்கிய மாட்டின் வீதி, தமிழரசுக்கட்சி நிர்வாகத்தினர், வாக்குறிதியை காற்றில் கலக்க விட்டனர், படத்துக்கு போஸ் கொடுப்பதை அவர்கள் துல்லியமாக செய்கின்றனர், இதனை தாங்கள் நிர்வகிப்பதும் இல்லை நிர்வகிக்க முன்வருவோரை விடுவதுமில்லை
மதில் அமைக்கப்பட்டு பூட்டு, திறப்புடன் இருக்கும் இச்சதுக்கத்தில் சமாதி மேல், சப்பாத்து கால்களுடன் ஏறி நின்று படமெடுக்கும் இச்சுற்றுலா இளைஞர்களின் அறியாமையை என்னவென்பது.. செல்வா யார் என்பதை இவர்களுக்கு புரிய வைக்காதது யார் தவறு?
செல்வா சதுக்கத்தை இவ்வளவு அலட்சியமாகவும், எந்த இலட்சிய நோக்கமும் இன்றி நிர்வகிப்பவர்களை, தலைவர் சம்பந்தனும் செயலாளர் மாவை சேனாதிராசாவும் தொடர்ந்தும் அனுமதிக்க போகிறார்களா? இதற்கான விடையை தமிழர்கள் தலைவர்களிடம் கோரிநிற்கின்றார்கள், செல்வா சதுக்கத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதை, இளைஞர்களால் புனித சமாதி இழிநிலை படுத்த படுவதையும், படங்கள் காட்டுகின்றன.. இரா.சி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக