ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

அவசர சேவை பிரிவினருக்கு அழைப்பை ஏற்படுத்தி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நாய் (படங்கள் இணைப்பு)

நாயொன்று அவசரசேவைப் பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்ட விநோத சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.



மேற்கு யோக்க்ஷியரைச் சேர்ந்த ஜோர்ஜ் என்ற மேற்படி இரண்டு வயதான நாயின் கழுத்து சம்பவ தினம் தற்செயலாக தொலைபேசி இணைப்பு கம்பிக்குள் சிக்கியதில், அது மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மேற்படி நாய் “999' என்ற அவசர சேவை பிரிவுக்கான தொலைபேசி இலக்கத்தை ஒருவாறாக அழுத்தி மேற்படி சேவைக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது நாய் மட்டுமே வீட்டில் இருந்துள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட வீட்டில் ஆட்கள் எவரோ ஆபத்தான நிலையிலிருந்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாக கருதிய அவசர சேவைப்பிவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொலிஸார் பூட்டிய வீட்டை தட்டிய போது அயலவர் ஒருவர் வீட்டின் சாவியை கையளித்து பொலிஸார் வீட்டுக்குள் செல்வதற்கு உதவினார்.
உள்ளே தொலைபேசி இணைப்புக் கம்பியில் கழுத்து இறுகிய நிலையில் நாய் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தது.

அவசர சேவை பிரிவினர் நாயின் கழுத்தை இறுக்கியிருந்த கம்பியை அகற்றி அதனை மீட்டெடுத்தனர்.மேற்படி நாய் எவ்வாறு அவசரசேவைப் பிரிவினருக்கு தொடர்பை ஏற்படுத்தியது என்பது எவருக்கும் புரியாத மர்மமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல