ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஒரு இறாத்தல் நிறையுடைய குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய பிளாஸ்டிக் பை (படங்கள் இணைப்பு)

பிறந்தபோது ஒரு இறாத்தல் நிறையை மட்டும் கொண்டிருந்த குழந்தை யொன்று “சான் விட்ச்' உணவை வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பை மூலம் உயிர் பிழைத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது. நடாஷா (26 வயது) என்ற மேற்படி குழந்தையின் தாய் 28 வார கர்ப்பமாக இருந்த போது குழந்தையின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. குழந்தை அப்பிள் பழத்தின் அள வுடையதாக காணப்பட்டது.



இந்நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் நடாஷா குழந்தையை பெற்றெடுத்தார்.
இதன்போது மேற்படி குழந்தை பிளாஸ்டிக் பையொன்றில் வைக்கப்பட்டது. அந்தப் பையானது விசேட குறைமாத குழந்தைகளுக்கான பராமரிப்பு பகுதிக்கு குழந்தை கொண்டு செல்லப்படும் வரை அதற்கு வெதுவெதுப்பைத் தரும் உபகரணமாக பயன்பட்டது.

இதனையடுத்து ஹோட்ஸ் நகரிலுள்ள பார்னெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது குழந்தையுடன் 3 மாதங்களைக் நடாஷா கழித்தார்.

தற்போது இந்தக் குழந்தை ஏனைய குழந்தைகள் போன்று ஆரோக்கிய நிலையை அடைந்துள்ளது. அக்குழந்தைக்கு ரோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல