தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர்களாக ஒரு காலத்தில் உலா வந்தவர்கள் சுகுமார், சாந்தன் போன்றவர்கள்.
இவர்களின் எழுச்சிப் பாடல்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெரிதும் பலம் சேர்த்து வந்திருக்கின்றன.
இதனால் இவர்களிடம் இருந்து புலிகள் இயக்கத்தையும், புலிகள் இயக்கத்தில் இருந்து இவர்களையும் எந்தவொரு காலத்திலும் பிரித்து விடவே முடியாது என்கிற அளவுக்கு வலுவான நெருக்கம் இருந்து வந்திருக்கின்றது.
ஆனால் இறுதி யுத்தத்தில் புலிகள் இயக்கம் சேடம் இழுத்துக் கொண்டு இருந்தபோது பாடகர் சுகுமாருக்கு கனவில்கூட எதிர்பார்த்து இருக்க முடியாத அனுபவம் ஒன்று ஏற்பட்டு விட்டது.
முள்ளிவாய்க்காலில் பொதுமக்களுக்கு ஒரே உணவுப் பஞ்சம். இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல மக்கள் முண்டி அடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் மக்களை நகர விடாமல் துப்பாக்கி முனையில் தடுத்துக் கொண்டு இருந்தனர் புலிகள்.
இயக்கத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு மாத்திரம் சோறும், பருப்புக் கறியும் கொண்ட கொஞ்ச உணவு கொடுக்கச் சொல்லி புலித் தலைமையிடம் இருந்து கட்டாய உத்தரவு ஒன்று வந்திருந்தது. இப்பணியை செவ்வனே செய்கின்ற பொறுப்பு தளபதிகளில் ஒருவரான இளம்பருதியிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. இவருக்கு உதவியாக இயக்க உறுப்பினர்கள் சிலரும் செயல்படல் ஆயினர்.
வரிசையாக வந்துதான் உணவு கேட்க வேண்டும். வருபவர்களின் முகங்களை பார்த்து, இயக்கத்துக்கு இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற சேவைகளின் முக்கியத்துவத்தை மனதால் கணக்கு எடுத்து, உணவு கொடுத்துக் கொண்டு இருந்தார் தளபதி இளம்பருதி. நிராகரிக்கப்பட்டவர்கள் மனதுக்குள் புறுபுறுத்துக் கொண்டே சென்றார்கள்.
இவ்விதம் வரிசையில் நின்றவர்களில் ஒருவர் சாட்சாத் சுகுமார். ஆனால் இவரையும் நிராகரித்து விட்டார் இளம்பருதி. எழுச்சிப் பாடகர் சுகுமாருக்கு இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போல் ஆகி விட்டது.
குடும்பம் பட்டினி கிடக்கின்றது, சோறு தரா விட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம் பருப்புக் கறியாவது தாருங்கள் என்று கால்களில் விழாத குறையாக தழுதழுத்த குரலில் இளம்பருதியிடம் கெஞ்சினார். ஆனால் இளம்பருதியின் நெஞ்சம் இளகவே இல்லை. சுகுமாருக்கு சாப்பாடு கிடைக்கவும் இல்லை.
புலிகள் கறிவேப்பிலையாகதான் இவர் விடயத்தில் நடந்து இருக்கின்றார்கள் என்பதை காலம் கடந்து உணர்ந்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட சுடலை ஞானத்தில்தான் இன்று பக்திப் பாடல்களையும், அமைச்சர் தேவானந்தா ஆதரவுப் பிரசாரப் பாடல்களையும் பாடி வருகின்றார் சுகுமார். முள்ளிவாய்க்கால் அனுபவத்தை நினைக்கின்றபோது கண்கள் கலங்கத்தான் செய்கின்றார்.
இருந்தாலும் பழக்கதோஷம் விட்டுப் போகவில்லை போல தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் அண்மையில் இவரது இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம்பெற்றது. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே..... ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே என்று இதில் பாடி பிரச்சினையில் மாட்டுப் பட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக