தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள்வீட்டு இரகசியங்களை வெளிப்படுத்தி புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் அந்த இயக்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்த தமிழ் பெண் ஒருவர்.
போர்க் குற்றங்கள், படுகொலைகள், மனிதாபிமானம் அற்ற செயல்பாடுகள் ஆகியன இலங்கை அரசால் பாரதூரமாக மேற்கொள்ளப்பட்டன என்று புலிகள் இயக்க ஆதரவு சக்திகளால் சர்வதேச சமூகத்துக்கு சூறாவளி பிரசார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகின்ற சூழலில் இப்புத்தகம் வெளியாகி உள்ளது.
புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. இதன் பெயரை தமிழில் பெண் புலி என்று சொல்லலாம். நிரோமி டி சொய்ஷா என்கிற புனை பெயரை நூலாசிரியர் பயன்படுத்தி இருக்கின்றார்.
இவருக்கு தற்போது வயது 42. இரு குழந்தைகளின் தாய். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கின்றார். இவர் நடுத்தர கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் வடக்கில் கன்னி மடம் ஒன்றில் தங்கி இருந்து படித்தபோது 17 வயதில் புலிகள் இயக்கத்தில் விருப்பப்பட்டு சேர்ந்து இருக்கின்றார். மிக நெருக்கமான நண்பியான அஜந்தியுடன் சேர்ந்து கன்னி மடத்தை விட்டு களவாக ஓடி புலிகள் இயக்கத்தில் இணைந்து இருக்கின்றார்.
11 வருடங்கள் வரை புலிகள் இயக்கத்தில் இருந்து இருக்கின்றார். புலிகள் இயக்கத்தின் படுகொலைகள், பசி, பட்டினி, வருத்தம், நெருங்கிய நண்பி அஜந்தியின் மரணம் ஆகியன இவரை வெகுவாக உலுப்பி விட்டன. பின் இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்கின்றார். இங்குதான் இவருக்கு ஆஸ்திரேலியாவுக்கான அகதி விசா கிடைத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் எதிர்கொண்டு இருந்த கஷ்டப்பாடுகளை புத்தகத்தில் எழுதி உள்ளார். அத்துடன் துரோகிகள் என்கிற முத்திரை குத்தப்பட்டு சக உறுப்பினர்கள் பலரும் புலிகள் இயக்கத் தலைமையால் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கோரமாக படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் நூலில் விபரித்து உள்ளார். இந்திய அமைதிப் படைக்கு உளவாளியாக செயல்பட்டார்கள், பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் வழங்கினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளில் துரோகிகளாக முத்திரை குத்தப்படுகின்ற உறுப்பினர்களுக்கு மீட்சியே கிடையாது என்று விளக்கி உள்ளார்.
இவருக்கு ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி சொய்ஷாவின் எழுத்துக்கள் மீது தனிப் பிரியம். ஆகவேதான் நிரோமி டி சொய்ஷா என்கிற புனைபெயரை புத்தகத்தில் கையாண்டு உள்ளார்.
இராணுவத்துடன் போராடி தனித் தமிழ் ஈழத்தை வெல்ல வேண்டும் என்பது 1987 இல் இவரது ஒரே தீவிர இலட்சியமாக இருந்தது என்றும் ஆனால் இது அர்த்தம் அற்ற விடயம் என்பதை கண்டு கொண்டார் என்றும் எனவே இயக்கத்தை விட்டு வெளியேறுகின்ற தீர்மானத்தை எடுத்தார் என்றும் கூறுகின்றார். எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக சொந்தப் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை என்கின்றார்.
இயக்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் புலிகளால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், கொடூரங்கள் ஆகியவற்றை புலிகள் இயக்க ஆதரவாளர்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இப்புத்தகத்தை எழுதி இருக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார்.
இந்நூல் பல பதிப்புக்களை கண்டு உள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா என்று பல இடங்களிலும் விற்பனையில் சக்கை போடுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக