தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு அமைப்புக்களில் ஒன்றாக கனடாவில் இயங்கி வருகின்ற உலகத் தமிழர் பேரவையை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றார்.
உலகத் தமிழர் பேரவையின் பெயரால் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்தமை நிரூபணம் ஆகி உள்ளது.
இதை அடுத்து இவரை நாடு கடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை Canada Border Services Agency எடுத்து உள்ளது.
பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டார் என்பதற்காக இவரை நாடு கடத்த வேண்டும் என கனேடிய குடிவரவு அதிகாரிகளுக்கு Canada Border Services Agency அறிவித்து உள்ளது.
உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த இந்நபர் கனடாவில் இருக்கின்றமைக்கும் அருகதையும், அனுமதியும் அற்றவர், ஏனென்றால் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து உள்ளார், இதனால் நாடு கடத்தப்படுகின்றார் என்று Canada Border Services Agency இன் பேச்சாளர் Faith St. John தெரிவித்து உள்ளார்.
இந்நபரை நாடு கடத்த எடுக்கப்பட்டு உள்ள தீர்மானம் குறித்து அகதிகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தில் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.
ஆயினும் இவரது பெயர் வெளிப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இவர் கனடாவில் கடந்த 15 வருடங்களாக வாழ்ந்து வந்தவர். 1997 ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்து இருக்கின்றார். அடுத்த வருடம் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக