வியாழன், 18 அக்டோபர், 2012

யாழில் புது மவுசு பெறும் இலைக் கஞ்சி (படங்கள் இணைப்பு)


யாழ். மாநகர சபையின் சித்த மருத்துவ பகுதியினரால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவாக இன்று இலைக் கஞ்சி வழங்கப்பட்டது.


மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைவர் எஸ். விஜயகாந் சத்துணவு வழங்கும் வைபவத்தை காலை 11.00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் சித்த மருத்துவ பகுதியில் பிரதம வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டார்கள்.

இலைக் கஞ்சிக்கு யாழில் மீண்டும் மவுசை ஏற்படுத்துகின்ற முயற்சியில் மாநகர சபையின் சித்த மருத்துவ பகுதி மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது.

நல்லூர் திருவிழா காலத்திலும் பக்தர்களுக்கு சித்த மருத்துவ பகுதியினரால் இலவசமாக இலைக் கஞ்சி விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல