சனி, 20 அக்டோபர், 2012

நட்பு என்பது எதுவரை?

திணிக்கப்பட்ட உறவுகளை விட, தேடியும் தேடாமலும் கிடைக்கும் உறவான நட்பு உலகில் மிகச்சிறந்தது.உறவின் உச்சக்கட்டம் நட்பு என்பதை விளக்கத்தான் “தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்” எனத் தந்தை- மகன் உறவைச் சொல்வார்கள்.
 
சாதி,மதம், மொழி,பணம், பதவி எனச்சாக்கடையில் விழுந்துகிடக்கும் இதயங்களைக் கூட பூக்கடையாய் மாற்றுவது நட்பு.பூக்களின் வண்ணம், வாசனை, அழகு,அளவு என எதுவும் பார்க்காமல் நட்பு என்ற மாலையை அலங்கரிக்கும்.புதிதாகப் பள்ளிக்கூடம் சென்ற ஒரு வாரத்திலேயே நண்பர்களைப் பெற்று,வார இறுதியில் கூட வகுப்புக்கள் நடைபெறாதா என ஏங்கவைப்பது இந்த நட்பே.

இளமைப்பருவத்தில் ஏற்படும் நல்ல நட்பு வாழ்நள் வரை நிலைக்கும்.தகவல்தொடர்பு முன்னேறி இருக்கும் இந்நாளில் கேட்கவே வேண்டாம் அது தொடர்ந்து வளரும்.குடும்ப உறவுகளில் உயர்வு, தாழ்வு உண்டு.பெரியவர்,சிறியவர் என்ற வேறுபாடு உண்டு ஆனால் உண்மையான நட்பில்,நட்பு மட்டுமே உண்டு.

ஒருவன் நல்ல இடத்தில் வந்து விட்டால், அவனை நன்பன் என்று சொல்லிக் கொண்டு வரும் பெரியகூட்டமும் இருக்கத்தான் செய்கிறது.நல்ல நண்பர்களையும்,நண்பன் என்ற பேரில் ஏமாற்றச் நினய்ப்பவர்களையும் நாம் அடையாளம் கண்டு வாழ்வது மிகவும் அவசியம்.

ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்தக் குளத்தின் நீரைப் பயிருக்கு பயன்படுத்தியதால் நாளுக்கு நாள் நீரின் அளவு குறைந்து  கொண்டிருந்தது.
 
ஒரு கொக்கு அந்தக் குளத்தில் சோகமாக நின்று கொண்டிருக்க,மீன்கள் அதன்கவலையின் காரணம் கேட்டன “இந்தக்குளத்தில் நீர் எல்லாம் வற்றிப்போனால நீங்கள் செத்துப்  போவீர்களே?”என்றது கொக்கு.“ நாங்கள் பிறந்தது முதல் இந்தக்குளத்தை தவிர வேறொன்றும் தெரியாது. நீங்கள்தான் பல இடங்களுக்கு பறந்து சென்று வந்துள்ளீர்கள். நீங்கள்தான் எங்களுக்கு நல்ல வழி சொல்ல வேண்டும்”என்றன மீன்கள்
 
“நன்பர்களே, இங்கிருந்து கொஞகத்தூரத்தில் ஒரு குளம் உள்ளது.அங்கே நீர் எப்பொழுதும் வற்றாது” என்றது கொக்கு.இதைக்கேட்ட மீன்களின் முகத்தில் மகிழ்ச்சி ஆனால் எப்படி அங்கே போவது என்ற கவலை. “நான் ஒவ்வொருவராக வாயில் ஏந்தி ,பறந்து  சென்று ,அந்தக்குளத்தில் விட்டு விடுகிறேன். நீங்கள் அங்கே பிளைத்துக் கெள்ளுங்கள்” என்றது கொக்கு.
நன்றியுள்ள மீன்களும் உடனே சம்மதித்தன. ஒவ்வொரு நாளும் கொக்கு மீனை வேறு குளத்திற்கு எடுத்து செல்வதாக சொல்லி, அருகில் உள்ள பாறையில் வைத்து கொன்று தின்றது.ஒருநாள் ஒரு நண்டு தன்னையும் அந்தக் குளத்தில் கொண்டு போய் விடுமாறு கேட்டது. கொக்கு தன்கழுத்தில் மெதுவாக கடித்து தொங்கிக் கொண்டு வருமாறு சொல்ல,நண்டும் அவ்வாறே செய்ய ,கொக்கு நண்டை தூக்கி சென்றது.
 
கொஞ்சத்தூரம் பறந்து பாறை அருகே கொக்கு இறங்கpி வரும் போது,கொக்கால் ஏமாற்றப்பட்டு கொக்குக்கு   உணவான மீன்களின் மீதி எலும்புகள் இந்நொரு பாறை போல குவிந்துகிடப்பதை நண்டு பார்த்தது. கொக்கின் வஞ்சம் புரிந்தது விட்டது நண்டுக்கு.தன் கூரான பற்களால் கொக்கின்  கழுத்தை நண்டு நறுக்க, கொக்கு பதறியது, துள்ளியது. பின் ரத்தம் கொட்டி இறந்தது.
 
நடந்து கொண்டே மீண்டும் குளத்துக்கு வந்த நண்டை மீன்கள் ஆச்சரியத்துடன் பார்த்தன.நண்டும் நடநததை கூற, நண்பன் எனச் சொல்லி ஏமாற்றிய தீய கொக்கை கொன்று தம்மைக் காத்த நல்ல நண்பன் நண்டுக்கு நன்றி சொல்லின.கூடா நட்பினால் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி படிப்பையும், வாழ்க்கை இழந்ததையும் காணலாம். எனவே, கவனமாகவும் இருக்கவேண்டும்.
 
பேனா நண்பர்கள் என முன்பு வெவ்வேறு நகரங்களிலும் நாடுகளிலும் இருந்தார்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு எழுதுவதிலும் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்வதிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலர் ஆர்வம் காட்டினார்கள்.இன்று இணையத்தளத்தில், சமூக வலைத் தளங்களில்,முகநூல் போன்ற தளங்கள் உள்ளன. எல்லா நாடுகளிலிருந்தும் நண்பர்கள் சேர உதவியாக இருக்கின்றன.
எனினும், நண்பர்களைப் போலவே இணையத்தளத்திலும் நல்லது எது கெட்டது எது என்று, தெரிந்த பெரியவர்களிடம் அறிந்கொள்ள வேண்டும்.நண்பர்களைப் பெறுவது எப்படி? நீ ஒரு நல்ல நண்பனாக இரு. நிறைய நண்பர்கள் தானாக கிடைப்பார்கள்.உன்னைப் பற்றி பேசுவதை விட மற்றவர்கள் பேசுவதைக கேள். அது நட்புக்கு நல்ல உரமாகும்.
கண்ணீரைத் துடைப்பது உறவு என்றால், கண்ணீரைத் தடுப்பது நட்பு ஆகும்.நட்பின் மூலம் உலகை ஒன்றாக்குவோம்.
Image Hosted by ImageShack.us


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல