சனி, 20 அக்டோபர், 2012

ஒரு கிலோ தங்கநகைகளை அணிந்திருந்த லண்டன் புலி கொழும்பில் கைது

ஒரு கிலோ எடை உள்ள தங்கநகைகளை அணிந்திருந்த லண்டன் புலி உறுப்பினர் ஒருவர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப்போராட்டத்தில் தங்கள் அவையங்களை இழந்து ஒரு நேர உணவுக்கே வழியின்றி ஆயிரக்கணக்கான போராளிகள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கையில் புலிகளின் பெயரை சொல்லித்திரியும் இவர் ஒரு கோடி தங்க நகைகளை பகட்டிற்காக சுமந்து திரிந்துள்ளார் என அச்செய்தியை அறிந்த வன்னி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
சர்வதேச புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர், பயங்கரவாத விசாரணை பிரிவினரால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்

அவர் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், 2000 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார் என கண்டுபிடித்துள்ள அரச புலனாய்வுத் துறை அவர்குறித்து பல கதைகளை தெரிவித்துள்ளது

இங்கிலாந்தில் 12 வருடங்கள் வசித்து வந்த இவர், விடுதலைப்புலுpகளின் வளர்ச்சிக்கு தேவையான பணத்தை சேகரித்து வழங்கியுள்ளார். இந்த தகவல்கள் தெரியவந்ததை அடுத்து, இந்த சந்தேக நபரை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
 இந்த நிலையில், இந்த சந்தேக நபர், 12 வருடங்களுக்கு பின்னர், இலங்கை சென்று, மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் சுமார் ஒரு கிலோ கிராம் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தாகவும் அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல