சனி, 20 அக்டோபர், 2012

'வாலைப்பலத் தோல் வலுக்கி கிளவி கீலே விழுந்தாள்... வணக்க்க்கம்'!- இங்கே நன்றாக தமிழ் பேசப்படும்!

வாலை(ழை)ப் பல(ழ)ம் வலு(ழு)க்கி கிள(ழ)வி கீலே(ழே) விழுந்தாள். என்ன இது என்று படித்த உடன் அதிர்ச்சியாகிவிட்டீர்களா? அச்சம் வேண்டாம் இது அன்றாடம் சின்னத்திரையில் தொகுப்பாளினிகள் பேசும் தமிழ்தான். வணக்க்க்க்கம் என்று இப்படி நீட்டி அழுத்தமாக சொல்வதுதான் பேஷனாகிப் போனது மேற்கொண்டு படியுங்கள்.


 தமிழுக்கு கெட் அவுட்

ஹாய் வியூவர்ஸ், வெல்கம் பேக் திஸ் ப்ரோக்கிராம் என்று தமிழ் சேனலில் இங்கிலீஸ் பேசினால்தான் வாய்ப்பு கிடைக்கும். இதைத்தான் நகைச்சுவையாக விவேக் ஒரு படத்தில் கூறியிருப்பார். அந்நிய மொழிக்கு கட் அவுட்டு!, தமிழுக்கு கெட் அவுட்டா? என்று குமுறியிருப்பார்.

மார்க்கெட் போன நடிகைகள்

இன்றைக்கு பெரும்பாலான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகள் பேசும் தமிழ் அப்படித்தான் இருக்கிறது. அதைவிட பெரிய கொடுமை மார்க்கெட் போன நடிகைகள் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதுதான். அவர்களின் தமிழைக் கேட்கும் போது இனி மெல்லச் சாகாது. தமிழ் அன்றே சாகும்.

குஷ்புவின் ஜாக்கெட் ஸ்பெசல்!

ஜெயா தொலைக்காட்சியில் ஜாக்பாட் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கும் போது யாரை வைத்து இதனை செய்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்தார்கள். பின்னர் குஷ்புவுக்கு அடித்தது ஜாக்பாட். அவர் பேசிய தமிழ் இருக்கே ஐயோ! ஐயோ! ஆனால் அதை யார் கேட்டார்கள். அவர் என்ன ஸ்டைல் ஜாக்கெட் அணிந்திருக்கிறார் என்றல்லவா தமிழகத்து தங்கங்கள் பார்த்தார்கள்.

 மார்க் போட்ட நடிகைகள்

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்று ஒரு நிகழ்ச்சி. இதிலும், குஷ்பு, ரம்பா, நமீதா என்று நடிகைகள் நடுவராக பங்கேற்றனர். தமிழ் தெரியாத நடிகைகளை கூப்பிட்டு தமிழைக் கொன்றால்தான் நிகழ்ச்சி வெற்றி பெரும் என்று தயாரிப்பாளர்கள் சென்டிமென்ட்டாக நினைத்துவிட்டார்கள்.

மச்சான் நடிகையின் தமிழ்

நமீதாவிற்கு திரைத்துறையில் சுத்தமாக மார்க்கெட் அவுட். கடைசியில் அவருக்கு ஜட்ஜ் பதவி தேடி வந்தது. சின்னத்திரை ஜோடிகளின் நடனத்தை பார்த்து சூப்பர் மச்சான். உங்க கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆகுது. எனக்கு கண்ல தண்ணி ஊத்துது என்று பேசி டிஆர்பிஐ ஏத்தினார். ஆனால் நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த உடைதான் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.

ஆள் மாறிய நடிகைகள்

அரசியல் புயலில் சிக்கிய குஷ்புவுக்கு பதிலாக ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு நதியா வந்தார். ஆனால் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சில எபிசோடுகளோடு பொட்டியை கட்டிவிட்டார்.

 
சிம்ரனின் தடுமாற்றம்

நதியாவிற்கு பிறகு ஜாக்பாட் வாய்ப்பு சிம்ரனுக்கு அடித்தது.நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது டயலாக் பேசுவது என்று நினைத்து விட்டார் போல சிம்ரன். தமிழ் அவர் நாவில் தடுமாறுகிறது. நன்றாக தமிழ் பேசத் தெரிந்தவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் நாளடைவில் மறந்துதான் போய்விடுவார்கள்.

கிக்கு தமிழ் பேசும் ரோஜா

சினிமாவில் டப்பிங் பேசியதால் தப்பிப் பிழைத்த நடிகைகள் எல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பில் வந்து சிக்கிக் கொண்டார்கள். ரோஜாவும் அப்படித்தான் அவரின் கன கடூர குரலில் தமிழ் பேசுவதைக் கேட்டு லக்கும் வேண்டாம் கிக்கும் வேண்டாம் என்று தெரிந்து ஓடத்தான் தோன்றுகிறது. ஆனால் அவர் ஜிகு ஜிகு உடைபோட்டு டைட்டில் பாடலுக்கு அவர் போடும் குத்தாட்டத்தை பார்க்கலாம்.


ஆயிரத்தில் ஒருத்தியான மந்த்ரா

ஏழெட்டு ஆண்டுகள் திரைத்துறையை விட்டு விலகியிருந்த நடிகை மந்த்ரா இப்போது ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிற நடிகைகளுடன் ஒப்பிடும் போது இவர் பேசும் தமிழ் கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனாலும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவார் என்கின்றனர் ரசிகர்கள்.

தமிழ் கற்றுக்கொடுங்கள் தயாரிப்பாளர்களே!

நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே மார்க்கெட் போன நடிகைகளை தொகுப்பாளினிகளாக புக் செய்யும் முன்பு அவர்களின் உடை அலங்காரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல அவர்களுக்கு நன்றாக தமிழ் பேசவும் கற்றுக்கொடுத்து அழைத்து வாருங்களேன் என்பது தமிழை நேசிக்கும் ரசிகர்களின் கோரிக்கை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல