செவ்வாய், 27 நவம்பர், 2012

கொட்டாவி விடும் கருவில் உள்ள சிசு

கருவில் உள்ள குழந்தை சிரிக்கும், உதைக்கும், கொட்டாவி கூட விடும். கருவில் இருக்கும் சிசு கொட்டாவி விடுவதை படம் எடுத்து வெளியிட்டு மலைக்க வைத்துள்ளனர் இங்கிலாந்து ஆய்வாளர்கள்.

சிசுவாக நாம் கருவில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்வது என்பது யாருக்குமே தெரியாது. ஆனால் தற்போது அது குறித்த புதிய வெளிச்சத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

இங்கிலாந்தின் துர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிட்டத்தட்ட 12 புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில் கருவில் இருக்கும் சிசுவின் நகர்வுகள் குறித்த அட்டகாசமான விஷயங்கள் அருமையாக வந்துள்ளன.

இதற்காக 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கட்டமாக மொத்தம் 4 முறை ஸ்கேன் செய்து பார்த்தனர். கடைசி ஸ்கேனிங் 36 வது வாரத்தில் எடுக்கப்பட்டது.

இந்த 15 பேருக்கும் எட்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 ஆண் குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு படத்தில் ஒரு சிசு கொட்டாவி விடுவது இடம்பெற்றுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், கருவில் இருக்கும் சிசுவானது ஒரு மணி நேரத்திற்கு நான்கு முறை கொட்டாவி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வீடீயோ படங்களை ஒவ்வொரு பிரேமாக அலசி ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். குழந்தையின் வாய் அசைவைத்தான் முக்கியமாக ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

குழந்தை கொட்டாவி விடுவது என்பது மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். மேலும் மூளையை ரிலாக்ஸ் ஆக்கும் முயற்சியாகவும் இதை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் வாயை மெதுவாகத் திறந்து வேகமாக மூடுகின்றன இந்த சிசுக்கள். இது கொட்டாவிக்கான குணாதிசயம்தான். எனவே இது கொட்டாவிதான் என்பது அவரது கருத்தாகும்.

பாலின வேறுபாடின்றி அனைத்து சிசுக்களும் ஒரே மாதிரியான வாய் அசைவை வெளிப்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இளம் சிசுக்கள்தான் அதிகளவில் கொட்டாவி விட்டனவாம்.

சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஆறு முறை சிசுக்கள் கொட்டாவி விட்டதாக ரிஸ்லேன்ட் கூறுகிறார்.

இருப்பினும் கொட்டாவி விடுவது எதற்காக என்று துல்லியமாகக் கூற முடியவில்லை. இது சோர்வின் காரணமாக இருக்கலாம் என்று ஒரு கருத்து இருந்தாலும், மூளை வளர்ச்சியைக் குறிப்பதாகவே இந்த கொட்டாவி விடுதலை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். அது உண்மையாகவிருந்தால் சிசுக்களின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொட்டாவியையும் ஒரு அடையாளமாக எதிர்காலத்தில் டாக்டர்களால் கருத முடியும் என்பது ரீஸ்லேன்ட்டின் கருத்தாகும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல