கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் உள்ள கொழும்பு மாவட்ட செயலக கட்டிடத்தில் நேற்று இரவு 8மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கட்டிடத்தில் தீபற்றி எரிந்துள்ளதால் அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தீவிபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணி மூல உறுதிகள், மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்களின் மூல பிரதிகள் உட்பட முக்கிய ஆவணங்கள் பல எரிந்துள்ளது.

தீவிபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காணி மூல உறுதிகள், மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்களின் மூல பிரதிகள் உட்பட முக்கிய ஆவணங்கள் பல எரிந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக