வெள்ளி, 16 நவம்பர், 2012

புலி புதைத்த கண்ணிவெடியில் சிக்கிய யானைக் குட்டிக்கு மறுவாழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் அம்பாறையில் புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி - படுகாயம் அடைந்து - ஒரு காலை இழந்த யானைக் குட்டிக்கு செயற்கைக் கால் போடப்பட்டு உள்ளது.

படுகாயம் அடைந்த யானைக் குட்டியின் உயிரை சத்திர சிகிச்சை நிபுணர்கள் காப்பாற்றினர். ஆனால் காலை அகற்ற வேண்டி நேர்ந்தது.

நடமாடுவதில் காணப்பட்ட சிரமம் காரணமாக யானைக் குட்டி அன்றாட வாழ்க்கையை ஓட்ட மிகவும் கஷ்டப்பட்டது.

ஆயினும் யானைக் குட்டியில் அவல நிலை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது இந்நிலையில் செயற்கைக் கால தயாரிக்கின்றமையில் சர்வதேச பிரசித்தி வாய்ந்த அபாஸ் நிலையம் இக்குட்டிக்கு இலவச செயற்கைக் கால் ஒன்றை வழங்கியது. அத்துடன் செயற்கைக் காலை பொருத்துவதற்கான சத்திர சிகிச்சைக்கும் உதவிகளைச் செய்தது.

யானைக் குட்டிக்கு இச்செயற்கைக் கால் மிகப் பெரிய ஆறுதல். குட்டியால் இப்போது நான்கு கால்களில் நடக்க முடியும்.

இலங்கையில் யானைக் குட்டி ஒன்றுக்கு செயற்கைக் கால் போடப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல