திங்கள், 28 ஜனவரி, 2013

கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்

இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைக் காட்சிகளை வைத்து விஸ்வரூபம் படத்தைத் தயாரித்துள்ள கமல்ஹாசனைக் கைது செய்ய வேண்டும் என்று ஆந்திராவைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் பசாவ் டெஹ்ரீக் என்ற அமைப்பின் அம்ஜத் உல்லா கான் என்பவர் கூறுகையில், படத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் எதிரான காட்சிகளை வைத்துள்ளார் கமல்ஹாசன். இப்படம் தடை செய்யப்பட வேண்டும். கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.

கர்நாடக போலீஸ் அதிகாரிகள் படம் பார்க்கிறார்கள்

இதற்கிடையே, விஸ்வரூபம் படத்திற்கு கர்நாடகத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடகத்திலும் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் போட்டுக் காட்ட மாநில விநியோகஸ்தரான கங்கராஜு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல