திங்கள், 28 ஜனவரி, 2013

கழுத்து, கைவிரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மல்வத்தை 2ம் பிரிவு புது நகரத்தைச் சேர்ந்த சீனித்தம்பி பிரேமநாதன் (40 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது வீட்டில் இருந்தபோது, நேற்று இரவு 8 மணியளவில் வாடகைக்கு முச்சக்கரவண்டியை மல்லிகைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு வருமாறு கூறி அவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது.

இதனையடுத்து,குறித்த நபர் தனது முச்சக்கரவண்டியை எடுத்துக் கொண்டு, மல்லிகைத்தீவு பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் மல்லிகைத்தீவு மயானத்துக்கு அருகில் வீதியில் இன்று காலை 6.00 மணிக்கு கைகள் மற்றும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் சடலம் அப்பாறை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் கைவிரல்களை வெட்டி மோதிரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி, என்பன கொள்ளையடிக்கப்பட்டுச் சென்றுள்ளதாக . சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறைப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல