‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காண நடிகர் கமலுக்கு நீதிபதி வெங்கட்ராமன் யோசனை தெரிவித்திருக்கிறார்.
கமல் நடித்து டைரக்ஷன் செய்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தை முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள தியேட்டர்களில் திரையிட அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் கடந்த 25-ந் தேதி திட்டமிட்டப்படி படம் ரிலீஸாகவில்லை.
அரசின் இந்தத் தடையை நீக்ககோரி கமல் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை பார்த்த பிறகு தீர்ப்பு அளிப்பதாகவும் 28-ஆம் தேதி வரை தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் ‘விஸ்வரூபம்’ படம் அவருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. வக்கீல்களுடன் உட்கார்ந்து படத்தை பார்த்தார்.
‘விஸ்வரூபம்’ வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தீர்ப்பும் இன்றே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து வக்கீல்கள், ‘விஸ்வரூபம்’ படக்குழுவினர் மற்றும் கமல் ரசிகர்கள் ஏராளமானோர் கோர்ட்டில் திரண்டு நின்றனர். முன் எச்சரிக்கையாக கோர்ட்டை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை கோட்டை மற்றும் அரசு அலுவலகங்கள், பாலங்களில் போலீசார் நிறுத்தப்பட்டனர். ‘விஸ்வரூபம்’ படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு ரிலீஸ் செய்ய அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பொதுமக்கள் சிலரை தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொல்வதுபோல் சீன்கள் உள்ளன. அப்போது முஸ்லிம்களின் புனித நூலான குரான் காட்டப்படுகிறது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.குரான் காட்சி நீக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கோர்ட்டில் இன்று ‘விஸ்வரூபம்’ வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதி இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காண யோசனை தெரிவித்தார்.
அரசு அதிகாரிகளை கமலஹாசன் சந்தித்து பேச வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, தீர்ப்பை நாளை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக