வியாழன், 31 ஜனவரி, 2013

பிரதமரை கவர்ச்சி காட்டி நெளிய வைத்த டிவி தொகுப்பாளினி (படங்கள் இணைப்பு)

செர்பிய பிரதமரை பேட்டி கண்ட டிவி தொகுப்பாளினி, திடீரென கவர்ச்சிகரமான செய்கைகளை காட்டி அவரை நெளிய வைத்து விட்டார். பின்னர்தான் தெரிந்தது, இது விளையாட்டுக்காக செய்யப்பட்ட செட்டப் என்று.

செர்பியப் பிரதமர் இவிகா டாசிக். இவர் அந்த நாட்டின் சோசலிஷ கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஒரு டிவிக்குப் பேட்டி அளித்தார். அவரை ஒரு இளம் தொகுப்பாளினி பேட்டி கண்டார். கவர்ச்சிகமான உடையில் அவர் அமர்ந்திருந்தார்.

பிரதமர் பேட்டி நிகழ்ச்சிக்காக வந்தபோது அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து இந்த தொகுப்பாளினி வரவேற்றார்.அப்போதே பிரதமருக்கு லேசான கூச்சம் ஏற்பட்டது.

மினி ஸ்கர்ட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண் பேட்டியின்போது திடீரென தனது கால்களை விலக்கி கவர்ச்சிகரமான முறையில் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்து செர்பிய பிரதமர் அதிர்ச்சியும், தர்மசங்கடமும் அடைந்தார்.

கிட்டத்தட்ட 1992ம் ஆண்டு வெளியான பேசிக் இன்ஸ்டிங்க்ட் என்ற ஆங்கிலப் படத்தில் நடிகை ஷரோன் ஸ்டோன் செய்ததைப் போலவே இது இருந்தது. சற்று நேரம் குழம்பிப் போன பிரதமர் பின்னர் சிரித்தபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சிரித்தார். அதன் பின்னர் பிரதமரிடம் வந்த டிவி நிறுவனத்தினர், இது வெறும் விளையாட்டுக்குத்தான், சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறவே ரிலாக்ஸ் ஆனார் பிரதமர்.
 

இந்த விவகாரப் படம் இப்போது இன்டர்நெட்டிலும் வெளியாகி ஏகப்பட்ட பேர் பார்த்துள்ளனர். அதாவது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்கள் கிடைத்துள்ளனவாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல