வியாழன், 31 ஜனவரி, 2013

இங்கிலாந்து பத்திரிகையின் கேலிச்சித்திரத்தால் சர்ச்சை

ஹிட்லரின் யூத அழிப்பு ஞாபகார்த்த தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான ‘தி சண்டே டைம்ஸ்’ இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கேலிச் சித்திரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த கேலிச் சித்திரத்தில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பலஸ்தீனர்கள் உடலுக்கு மேலால் சுவர் எழுப்புவது போன்றும் அதற்கு சீமந்தாக அந்த உடல்களில் இருந்து வழியும் இரத்தத்தை பயன்படுத்துவது போன்றும் அமைந்துள்ளது.

இந்த கேலிச் சித்திரத்தின் பட விளக்கமாக “இஸ்ரேல் தேர்தல் தொடர்ந்து அமைதியை ஸ்திரப்படுத்தும்?” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேலிச் சித்திரத்திற்கு எதிராக இஸ்ரேல் தரப்பில் கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. “இந்த கேலிச் சித்திரத்தை ஆண்டின் வேறு எந்த தினத்திலாவது போட்டிருக்கலாம். யூத படுகொலை ஞாபகார்த்த தினத்தில் அதை பிரசுரிப்பது அருவருப்பான செயலாகும்.

இதற்கு பத்திரிகை மன்னிப்புக் கேட்க வேண்டும்” என ஐரோப்பிய யூத கொங்கிரத் கோரியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தி சன்டே டைம்ஸ் பத்திரிகை இது இஸ்ரேலியர்களுக்கு எதிராக பிரசுரிக்கப்பட்டதல்ல.இது நெதன்யாகு மற்றும் அவரது கொள்கையை வெளிப்படுத்தவே பிரசுரிக்கப்பட்டது என கூறியுள்ளது. அத்துடன் இஸ்ரேல் தேர்தல் முடிந்து வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதாலேயே இந்த கேலிச் சித்திரம் பிரசுரிக்கப்பட்டது என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல