வியாழன், 31 ஜனவரி, 2013

‘விஸ்வரூபம்’ விவகாரம் : புதிய கோரிக்கையுடன் கிளம்பிய முஸ்லீம் அமைப்புகள்!

‘விஸ்வரூபம்’ பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிதாக கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

இது குறித்து, கமல், ரஜினி பற்றி மிகக் கேவலமாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

விஸ்வரூபம் விவகாரத்தில் சகோ.பஷீர் தொடர்பு கொண்டது உண்மை. அவரை நாம் பிரதிநிதியாக அனுப்பவில்லை. 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும்.

பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் வாசல் திறக்கப்படலாம். வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும்.

இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல