வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (29.01.2013) 900,000 ரூபா பெறுமதியான நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்த கணவன், மனைவி வசித்து வந்த வீட்டுக்குள் நள்ளிரவு வேளை வீட்டின் சமயலறையின் புகைக்கூடு வழியாக உள்நுழைந்த திருடர்களைக் கண்ட வீட்டுக்காரர்கள் சத்தமிட முயன்ற போது திருடர்கள் வீட்டின் பெண்ணிண் தொண்டையில் துணியால் இறுக்கியதுடன் சத்தமிடாதவாறு கணவனின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு திருட்டை மேற்கொண்டுள்ளனர்.
திருடர்கள் வீட்டில் இருந்த 15 பவுண் நகை, 25,000 ரூபா பணம் மற்றும் 2 கைத்தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக