மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த ஃபத்வா எனும் பகிரங்கக் கொலை மிரட்டலைக் கண்டிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த இளம் பெண்களின் இசைக்குழுவான “பிரகாஷ்” (paragaash)-க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.
இவை எல்லாம் பாகிஸ்தான் ஆக்ரமித்துத் திருடிக்கொண்ட காஷ்மீரில்; தாலீபான்களின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடக்கவில்லை. ஜனநாயகத்தின் வாசலை வெளிச்சமிட்டுக் காட்டும் பாரத மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. நாகரிக சமுதாயமான பாரத சமுதாயத்தில் இந்த அநாகரிகமான செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை பேசும் எந்த நாளேடும் இது குறித்துப் பேசவில்லை. விவேகானந்தர் படத்தை பிரசுரிப்பதால் கற்பழிப்புகள் அதிகமாகிறது என்று அவதூறு செய்தி பரப்பிய இழிவான The Hindu நாளேடு இது பற்றி உடனே செய்தி வெளியிடவில்லை. ஆபாசத்தையும் கலாசாரக் கேட்டையும் பெருமளவு வியாபாரப்படுத்தும் ஆபாச Outlook இதழோ, இன்ன பிற காசு வாங்கிக்கொண்டு ஊடக வேசித்தனம் புரியும் இதழ்களோ, இது பற்றி வாயே திறக்கவில்லை. உச்சபட்சக் குரலில், இந்தியாவில் மகளிர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, கலாசாரக் காவலர்களான பாஜக, சங்பரிவார் கும்பல்களை அழிக்க வேண்டும் என்று தினமும் பிரசாரம் செய்யும்– அயல்நாட்டுப் பணத்தில் கொழிக்கும் ஆங்கில ஊடக ஜாம்பவான்களோ வாயைத் திறக்கவில்லை.
இந்த ஆபத்தான, வெளிப்படையான கொலை மிரட்டல் ஃபத்வா இந்தியச் சமூகத்தை எதை நோக்கி நகர்த்துகிறது? இது கேள்விக்குள்ளாக்கும் பெண் சுதந்திரத்தின் பின்விளைவுகள் என்ன? நாகரிக சமூகத்தில் இப்படியான பிற்போக்கான, அடிப்படைவாத சிந்தனைகளின் தாக்கம் என்ன? ஏற்கெனவே கல்வி அறிவு, வேலை வாய்ப்புத் துறையில் பின்தங்கி இருக்கும் ஏழை இஸ்லாமிய சகோதரிகளின் சமூக நிலையை என்ன விதமான அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தும்? தாலிபான் பாணியிலான வஹாபிய சிந்தனையின் பின்விளைவுகளையும் யோசிக்கலாம்.
சமீப காலமாக இந்தியா போன்ற பண்பாட்டுக் கூறுகளின் விளைநிலத்தில் அடிப்படைவாத அச்சுறுத்தல்களும், வஹாபியக் குரூரங்களுக்கு பெருகும் சிறுபான்மையின ஆதரவும், பொது நீரோட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையின மக்களை அச்சமும் பீதியும் கொள்ள வைக்கின்றன. கற்காலச் சிந்தனைகளை ஒட்டிய காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், நாகரிக மக்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் குரூரமான தண்டனை முறைகள். பழங்குடிகளின் கண்மூடித்தனமான போர் வெறியேற்றப்பட்ட மனிதர்கள், பாதிக்கப்படும் இளைய சமுதாயம், போராடிப் பெற்ற பெண் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கி பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், பாலியல் கொத்தடிமைகளாகவும் ஆக்குவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் இது போன்ற இழிவான செயல்களை உடனடியாகக் கிள்ளியெறியா விட்டால் பெரிய பாதிப்பை, கலாசாரச் சீரழிவை, மானுடப் பேரழிவை இது போன்ற செயல்கள் ஏற்படுத்தி விடும். கருத்துக் குருடர்களையும், போலி மதச்சார்பின்மை பேசுபவர்களையும், காட்டுமிராண்டிகளையும், அடிமை வியாபாரம் செய்வதற்காக அலையும் வியாபாரிகளையும் புறம்தள்ளிவிட்டு நாம் முன்னகர்வோம்.
(வீர. ராஜமாணிக்கம்)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக