வியாழன், 28 பிப்ரவரி, 2013

விடைபெறும் தருனம்…

பாப்பரசர் பெனடிக்ட், புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் முன் தோன்றி பேசினார். தான் பதவி விலகுவதற்கு முன்னதாக இறுதியாக பொதுமக்களை சந்திக்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 600 ஆண்டுகளில் தானாகவே பதவி விலகும் முதலாவது பாப்பரசர் இவராவார். ‘பதவி விலகுவது என்ற தனது முடிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தான் முழுமையாக அறிவதாகவும் ஆனால் திருச்சபை மீதும், ஆண்டவரின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக தாம் மிகுந்த மன அமைதியுடன் இருப்பதாகவும்’ அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

‘அண்மைக்காலமாக தனது பலவீனம் அதிகரித்து வருவதை தான் உணர்ந்ததாகவும், நல்ல முடிவை எடுப்பதற்கு தனக்கு உதவ வேண்டும் என்று ஆண்டவரைக் வேண்டிக்கொண்டதாகவும் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில்’ அவர் கூறினார்.

ஒரு பாப்பரசராக இருப்பதில் உள்ள மகிழ்ச்சி மற்றும் சிரமங்கள் ஆகியவை குறித்து அவர் பேசினார். தனக்கு அடுத்தபடியாக பாப்பரசராக வர இருப்பவருக்காக தான் பிரார்த்திப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல