வியாழன், 25 ஜூலை, 2013

தலை சிக்கிய நிலையில் தொங்கிய 5 வயது சிறுமி!!!! (படங்கள் இணைப்பு)

மாடிக் குடியிருப்புக் கட்டடமொன்றின் 24 ஆவது மாடியிலுள்ள வீட்டின் ஜன்னல் சட்டங்களிடையே தலை சிக்கி உயிராபத்தான நிலையில் தொங்கிய 5 வயதுச் சிறுமியொருவரை மீட்புப் பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் மீட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

தரையிலிருந்து 70 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் தொங்கிய மேற்படி சிறுமியின் தலை மட்டும் ஜன்னல் சட்டங்களிடையே சிக்கிக் கொண்டிராவிட்டால், அச்சிறுமி கீழே விழுந்து உடல் சிதறி உயிரிழந்திருக்க நேர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுபி மாகாணத்தில் டேயி நகரிலுள்ள தனது வீட்டில் தனித்து விடப்பட்டிருந்த அந்த சிறுமி, ஜன்னலில் ஏறி அதனூடாக வெளியே பார்க்க முயற்சித்த வேளையில் அந்த சட்ட இடைவெளியினூடாக வெளியே வழுக்கிச் சென்றுள்ளார்.

கம்பிச் சட்டங்களிடையேயான இடைவெளி சிறிதாக இருந்ததால் சிறுமியின் தலை அந்த கம்பிச் சட்டங்களிடையே சிக்கிக் கொண்டது.

குழந்தையின் அழு குரலைக் கேட்டு வந்த குடியிருப்பாளர்கள், சிறுமி அபாயகரமான நிலையில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமியின் வீட்டுக் கதவை உடைத்துத் திறந்த அவர்கள், சிறுமி ஜன்னல் சட்டங்களினூடாக போர்வையை நுழைத்து சிறுமியின் உடலை ஜன்னல் விளிம்பு வரை உயர்த்தி அவரது கால்களை ஜன்னல் சட்டத்துடன் கட்டியுள்ளனர்.

இதனால் உடல் பாரத்தால் சிறுமியின் தலை பகுதி ஜன்னல் சட்டங்­களில் சிக்கி காயமடைவது தடுக்கப்பட்டது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் சிறுமியை ஜன்னல் சட்டத்தினூடான இழுத்து எடுத்து அவரை காப்பாற்றியுள்ளனர்.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல