வியாழன், 25 ஜூலை, 2013

பிரித்தானிய புதிய வாரிசு ரஷ்யாவின் இரத்தத்தை உறிஞ்சப்போகிறது

- ரஷ்ய அரசியல்வாதியின் விமர்சனத்தால் சர்ச்சை

பிரித்தானிய இளவரசர் வில்லியத்துக்கும் கேம்பிரிட்ஜ் சீமாட்டிக்கும் புதிதாக பிறந்துள்ள மகன், 21 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ரஷ்யாவின் இரத்தத்தை உறிஞ்சவுள்ளான் எனவும் அதனால் அவனது பிறப்பைக் கொண்டாடக் கூடாது எனவும் தெரிவித்து ரஷ்ய அரசியல்வாதியொருவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் முடிக்குரிய வாரிசுகள் வரிசையில் மூன்றாம் நிலையை வகிக்கும் அந்தஸ்துடன் பிறந்துள்ள பாலகனான இளவரசரது ஜனனத்தை பிரித்தானியர்கள் உள்ளடங்கலாக முழு உலகமும் விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையில், மேற்படி எதிர்­மறை­யான கருத்தை வெளியிட்டதன் மூலம் ரஷ்ய லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் விளாடிமிர் ஸிரினோவ்ஸ்கி (67 வயது) கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

‘அந்த வாரிசு (இளவரசர் வில்லியத்தின் குழந்தை) தொடர்பில் எனக்கு எதுவித அக்கறையும் இல்லை. அந்தக் குழந்தை ரஷ்யாவின் இரத்தத்தை உறிஞ்சப் போகிறது’ என ஸிரினோவ்ஸ்கி ரஷ்ய அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் றியோ நொவொஸ்ரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

''பிரித்தானிய அரச குடும்பமானது எமது நாட்டை அழித்துள்ளது. அந்த அரச குடும்பத்தின் இன்னொரு வாரிசாக பிறந்துள்ள அந்தக் குழந்தை 21ஆம் நூற்­றாண்டின் மத்தியில் எமது இரத்தத்தை உறிஞ்சப்போகிறது. அதனால் அக்குழந்தையின் பிறப்பு எமக்கு எந்தவிதமான சந்தோஷத்தையும் தரவில்லை'' என அவர் கூறினார்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், புதிய வாரிசின் ஜனனம் குறித்து பிரித்தானிய எலிஸபெத் மகாராணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல