இலங்கையர்கள் உட்பட அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட படகு ஜாவா தீவுக்கு அருகில் மூழ்கி உள்ளது.
இதில் ஐந்து குழந்தைகள், ஒரு கர்ப்பிணி உட்பட 09 பேர் இறந்து உள்ளனர்.
சிடான் நகருக்கு அருகில் நேற்று முன் தினம் மாலை படகு மூழ்கி உள்ளது. பயணத்தை ஆரம்பித்து 09 மணித்தியாலங்களில் விபரீதம் நேர்ந்து உள்ளது.
அளவுக்கு அதிகமானவர்களை ஏற்றியதாலேயே விபத்து ஏற்பட்டு உள்ளது.
18 மாதங்கள், 02 வருடங்கள், 07 வருடங்கள் வயது உடைய குழந்தைகளே இறந்து உள்ளனர்.
இறந்தவர்களில் இரு பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் இலங்கையர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளார்கள். ஆயினும் உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் இலங்கையர்கள் என்று சாட்சிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை, ஈரான், ஈராக் ஆகியவற்றை சேர்ந்த இன்னமும் 06 பேரை காணவில்லை. படகு நீரில் மூழ்க தொடங்கியதை அவதானித்தவர்களில் சிலர் உயிர் காப்பு படகில் ஏறி தப்பிக் கொண்டார்கள்.
பலர் கடலில் குதித்து நீந்தினர். இவர்கள் மீனவர்களாலும், இந்தோனேஷிய பாதுகாப்பு அதிகாரிகளாலும் காப்பாற்றப்பட்டனர்.
பயணிகளில் பெரும்பான்மையானவர்கள் இலங்கையர்கள் ஆவர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக