வியாழன், 25 ஜூலை, 2013

தமிழர்களுக்கு தமிழர்களே எதிரியாக இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது

லண்டனில் மேலும் 3 தமிழர்கள் கைதாகி நாடு கடத்தப்படுகிறார்கள்!

பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியான யோக்-ஷியாரில், 3 தமிழர்களைப் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். யோக்-ஷியாரில் சட்டன் என்னும் பகுதியில் உள்ள ருடே லோக்கல் என்னும் நியூஸ் ஏஜன் கடையில் அனுமதிப் பத்திரங்கள் இன்றி வேலைபார்த்ததாகவே மேற்படி இவர்கள் மூவரையும் பொலிசாரும் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளும் இணைந்து கைதுசெய்துள்ளார்கள்.

குறிப்பிட்ட இம் மூவரையும் உடனடியாக , இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளார்கள் பிரித்தானிய அதிகாரிகள். இது ஒரு புறம் இருக்க குறிப்பிட்ட இக் கடையில் சட்டத்துக்கு புறம்பான மற்றும் போலியான மதுபாணங்கள் இருந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

தமக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றுக்கு அமைவாகவே தாம் , குறிப்பிட்ட கடைக்குச் சென்று அங்கே வேலை பார்த்தவர்களை விசாரித்ததாகவும் ஆனால் அதேவேளை அக் கடையில் போலியான மதுபாணங்கள் இருப்பது பின்னரே கண்டுபிடிக்கப்பட்டாதாகவும் கூறப்படுகிறது. பல தமிழர்கள் இதுபோல சரியான அனுமதிப் பத்திரங்கள் இன்றி, இதுபோன்று வேலைசெய்து வருகிறார்கள். எனவே அனைவரும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தமிழர்களுக்கு தமிழர்களே எதிரியாக இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் துரோகிப் பட்டம் கட்டுவது இல்லை என்றால் அவர் வேலைதொடர்பாக இமிகிரேஷனுக்கு அடித்துச் சொல்வது என்பது பிரித்தானியாவில் பரவலாக நடைபெற்று வருகிறது. ஆங்கிலம் பேசத் தெரியாது என்றால் கூட எப்பாடுபட்டாவது, தனக்கு பிடிக்காதவரை மாட்டி விட அவர் ஆங்கிலம் கதைப்பார் என்ற நிலை காணப்படுகிறது.

சரியான வேலை அனுமதிப் பத்திரம் இல்லாமல் ஒருவர் கடையில் வேலைசெய்தால், கடைக்காரருக்கு தண்டப் பணம் அறவிடப்படுகிறது. இது தற்போது 10,000 பவுண்டுகள் ஆகும். ஆனால் அதனை 20,000 ஆயிரம் பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய இமிகிரேஷன் தற்போது தீர்மாணித்துள்ளது. இதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவையில்லை. அவர்கள் சுட்டறிக்கை ஒன்றின் மூலமே இதனை நிறைவேற்ற முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல