செல்போனில் பேசி காதலை வளர்த்தவர், காதலி அழகாக இல்லை என்பதால் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன்(24). கடையில் வேலை பார்த்து வந்தார். 6 மாதம் முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேசியது பெண் குரல். ‘’சாரிங்க. பிரெண்டுக்கு போட்டேன். உங்களுக்கு வந்திடிச்சு’’ என்றார். குரலின் இனிமையில் மனதை பறிகொடுத்தார் நடராஜன். ராங் கால் அழைப்பு, நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது. ‘காதல் கோட்டை’ பாணியில் முகம் பார்க்காமலேயே காதலை தொடர முடிவு செய்தார்கள். கடந்த 6 மாதமாக போன்வழி காதல் நீடித்தது.
காதலிப்பவரின் முகத்தை எத்தனை காலம்தான் பார்க்காமல் இருப்பது?. 4 நாள் முன்பு இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். சொன்னபடி, சந்தித்துக் கொண்டனர். நடராஜனை பார்த்ததுமே பிடித்துவிட்டது அந்த பெண்ணுக்கு. நடராஜனின் நிலையோ நேர்மாறு. குரலை வைத்து அவர் கற்பனை செய்து வைத்திருந்த அழகு உருவத்துக்கும், நேரில் பார்த்ததற்கும் துளிகூட சம்பந்தம் இல்லாததாக உணர்ந்தார். வேண்டா வெறுப்பாக பேசிவிட்டு விடைபெற்றார் நடராஜன்.
காதலியையும் அவரது செல்போன் அழைப்புகளையும் தவிர்க்க ஆரம்பித்தார். காதலி அழகாக இல்லை என்று நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். நேற்று முன்தினம் இரவு போத்தனூர்& மதுக்கரை இடையே பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன்பு பாய்ந்து நடராஜன் தற்கொலை செய்து கொண்டார். காதலி அழகாக இல்லை என்ற விரக்தியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக