-4 மில்லியன் டொலர் நஷ்டஈடு
சிறைச்சாலைக் கூடமொன்றில் 4 நாட் களுக்கு மேலாக கவனிப்பாரற்று அடைக்கப் பட்டிருந்த அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு 4 மில்லியன் டொல ருக்கும் அதிகமான பணம் நஷ்டஈடாக வழங்கப்பட் டுள்ளது.
கடந்த ஆண்டு போதைவஸ்து தொடர்பான தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட டானியல் சொங் என்ற மேற்படி மாணவர், அவர் மீது எதுவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் சிறையிலடைக்கப்பட்டு, அந்நிலையிலேயே தொடர்ந்து 4 நாட்களாக கைவிடப்பட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் டானியல் தனது சிறுநீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளார்.
அத்துடன் தான் இறந்து விடக் கூடும் என்ற அச்சத்தில் அவர் தனது கையில் தனது தாய்க்காக செய்தியொன்றையும் செதுக்கியுள்ளார்.
அவர் சான் டியகோவிலுள்ள போதை வஸ்து தடுப்பு பிரிவு சிறைக்கூடத்திலிருந்து அவர் மீட்கப்பட்ட போது, அவர் தனது சொந்த மலசல கழிவுகளுக்கு மத்தியில் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடல் வரட்சி, சிறுநீரகம் செயலிழப்பு, தசையிறுக்கம் உள்ளடங்கலான பாதிப்புகளுக்கு உள்ளாகிய நிலையில் 5 நாட்களை மருத்துவமனையில் கழிக்க நேர்ந்தது. அத்துடன் அவரது உடல் நிறையும் 15 இறாத்தலால் குறைந்திருந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக