வியாழன், 1 ஆகஸ்ட், 2013

'கசமுசா' நேரத்தில் ஒரே சத்தம்... பெண் மீ்து கேஸ் போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்


மிடில்ஸ்பரோ, இங்கிலாந்து: இங்கிலாந்தின் மிடில்ஸ்பரோ நகரைச் சேர்ந்த 31 வயதுப் பெண், செக்ஸ் மூடு வரும்போதெல்லாம், அதிகமாக சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை நெளிய வைத்ததால் அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.

அந்த சவுண்டு பார்ட்டியின் பெயர் ஜெம்மா வாக்கர். 31 வயதாகிறது. இவருக்கு அதிகாரிகள் ரூ. 1,19,659 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கணவரை விட்டு தனது ஒரே குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

எப்பப் பார்த்தாலும் ஒரே சத்தம்
ஜெம்மா வீட்டில் இருந்தால் ஒரே சத்தம்தானாம். அதிக சத்தத்தில் பாட்டுக் கேட்பது, இவரே கத்திப் பாடுவது, கூச்சலிடுவது என்று அமர்க்களம் செய்வாராம்.

செக்ஸியான சத்தம் வேற...

மேலும் இவருக்கு செக்ஸ் மூடு வந்து விட்டால் போதும், அக்கம் பக்கத்தினரால் காது கொடுத்து இவர் போடும் சத்தத்தைக் கேட்க முடியாதாம். அமர்க்களப்படுத்தி விடுவாராம் - சவுண்டு கொடுத்தே.

கொந்தளித்த அக்கம்பக்கத்தினர்

இவரது சத்தத்தால் கடுப்பாகிப் போன அக்கம் பக்கத்தினர் கொதித்தெழுந்தனர். குறிப்பாக இயான் மற்றும் சூசன் நிக்கோல்ஸ் தம்பதி வழக்கே போட்டு விட்டனர்.

அபராதம் கட்டும்மா..!

இந்த வழக்கை விசாரித்த டெஸ்ஸைட் கோர்ட், தற்போது ஜெம்மாவுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூங்கவே முடியலைங்க...!

இந்த விவகாரம் குறித்து சூசன் கூறுகையில், என்னால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. எப்பப் பார்த்தாலும் சத்தம் போட்டபடி இருப்பார். ஆபாசமாக கத்துவார்... அவரது தொல்லை தாங்க முடியாமல்தான் கேஸ் போட்டோம் என்றார்.

சவுண்டைக் குறைக்கச் சொல்லி வார்னிங்...!

கடந்த செப்டம்பர் மாதமே இப்படியெல்லாம் கத்தக் கூடாது, சத்தத்தைக் குறையுங்கள் என்று ஜெம்மாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம். ஆனால் அதன் பின்னர் ஆறுமுறை அவரது சத்தம், நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவை விட அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
நாட்டில் எப்படியெல்லாம் பிரச்சினை வருது பாருங்க....!

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல