வியாழன், 22 ஆகஸ்ட், 2013

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எண்களுக்கான நியூமெரிக் கீ போர்டு கிடைக்க என்ன செய்திட வேண்டும்?

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் விர்ச்சுவல் ஆன் ஸ்கிரீன் கீ போர்டில் எழுத்துக்களுக்கு மேலே ஸ்பெஷல் கேரக்டருடன் இணைந்த எண்கள் கீ போர்டு மட்டுமே தரப்படுகிறது. இதற்குக் காரணம், குறைவான பிக்ஸெல்களுடன் கீ போர்டு காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி 28, 30 , 10 போன்ற எண்கள் அமைப்பது சற்று நேரம் எடுக்கும் செயல்பாடாக அமைகிறது.

நீங்கள் விரும்பும் வகையில், தனியாக கீ போர்ட் கொண்ட ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை நாம் அமைக்கலாம். கீழே தரப்பட்டுள்ளபடி செயல்படவும்.

1. “OnScreen Keyboard”ல், வலது பக்கம் உள்ள “Options” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இது “PrtScn” என்ற கீக்குக் கீழாக இருக்கும்.

2. இங்கு ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Turn on numeric key pad” என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். அடுத்து கிடைக்கும் விர்ச்சுவல் கீ போர்டில், “NumLock” பட்டனை அழுத்தி, எண்களுக்கான கீ பேடினைப் பெறலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல