விண்டோஸ் 8 ல் சில பைல்களைத் திறப்பதற்கு, இந்த ஓ.எஸ்.அமைத்துள்ள மாறா நிலையில் உள்ள புரோகிராம்களுக்குப் பதிலாக, நாம் விரும்பும் புரோகிராமினை மாறா நிலைக்கு மாற்ற விரும்புனால் அதாவது எடுத்துக் காட்டாக, படங்கள் போட்டோக்களைத் திறந்து பார்க்க, விண்டோஸ் போட்டோ வியூவர் புரோகிராமினையே பயன்படுத்த விரும்பினால்... இதனை எப்படி அமைப்பது
விண்டோஸ் 8 ஓ.எஸ். இது போன்ற பல விஷயங்களை நமக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. டிபால்ட் புரோகிராம் எனப்படும், மாறா நிலையில் உள்ள புரோகிராம்களை, இந்த சிஸ்டம் ஏற்கனவே செட் செய்துள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால், நாம் டெஸ்க்டாப் நிலையில் ஒரு பைலைத் திறக்க முயற்சிக்கையில், அது அந்த பைலை மெட்ரோ அப்ளிகேஷன் ஒன்றில் திறக்கும்.
இதனைத் தொடர்ந்து நாம் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த இயலாது. நீங்கள் குறிப்பிடும் போட்டோ மற்றும் பட பைல் இது போலத்தான். இதில் கிளிக் செய்தால், போட்டோ அப்ளிகேஷனில் பைல் திறக்கப்படும். ஆனால், நீங்கள், விண்டோஸ் போட்டோ வியூவரில் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். இதற்காக, ஒவ்வொரு பட பைலையும், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open With என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதில் நாம் விரும்பும் புரோகிராமினை ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்க முடியாது. இதனை டிபால்ட் எனப்படும் மாறா நிலை புரோகிராமாக எப்படி மாற்றுவது எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் ஸ்டார்ட் ஸ்கிரீனில், default programs என்று டைப் செய்திடவும். தரப்படும் முடிவுகளில் Default Programs என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது, டிபால்ட் புரோகிராம்ஸ் விண்டோ, டெஸ்க் டாப்பில் திறக்கப்படும். இதில் நீங்கள் குறிப்பிடும் பைலுக்கான டிபால்ட் புரோகிராமினைத் திறக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் கிடைக்கும். எளிய வழி “Set your default programs” என்பதைத் தேர்ந்தெடுத்து அமைப்பதுதான்.
இப்போது நீங்கள் குறிப்பிடும் பைல் வகைக்கான புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அதனையே மாறா நிலை புரோகிராமாக அமைக்கவும்.
குறிப்பிட்ட புரோகிராம், எந்த எந்த வகை பைல்களைத் திறக்க மாறா நிலையில் உள்ள புரோகிராமாக அமைக்கப்பட வேண்டும் என விரும்பினால், இரண்டாவது ஆப்ஷனாக உள்ள “Choose defaults for this program” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், நீங்கள் ஒவ்வொரு வகை பைலையும் திறந்து இதனுடன் திறக்கப்பட வேண்டிய பைலாக அமைக்கலாம்.
இந்த மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர், சேவ் செய்து வெளியேறவும். இனி நீங்கள் விரும்பிய வகையில், டிபால்ட் புரோகிராம் இயங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக