வியாழன், 22 ஆகஸ்ட், 2013

எரர் மெஸேஜ் (Error message)

இணையத்தில் உலாவருகையில் “A script on this page is causing IE to run slowly. If it continues to run, your computer might become unresponsive” என்று ஒரு மெசேஜ் ஏன் கிடைக்கின்றது?

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட் அல்லது விசுவல் பேசிக் ஸ்கிரிப்ட் ஆகிய ஒன்றில், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவை இயங்கு வதில் தாமதம் ஏற்பட்டாலோ இந்த எர்ரர் மெசேஜ் கிடைக்கும்.

ஸ்கிரிப்ட் இயங்க அதிக நேரம் எடுத்துக் கொள்கையில், உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர், “என்ன நீங்கள் காத்திருக்கிறீர்களா? அல்லது இதனை நிறுத்தி விடலாமா?” எனக் கேட்கிறது.

இதற்கான தீர்வினை மைக்ரோசாப்ட் நிறுவனம் http://support.microsoft.com/kb/175500 என்ற முகவரியில் உள்ள தளத்தில் தருகிறது. இந்த தளம் சென்று Microsoft Fix it 50403 என்ற ஐகானில் கிளிக் செய்து, அங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் தரும் வழிகள் படி சென்றால், இந்த பிரச்னையைத் தீர்க்கலாம்.

பிரச்னை உள்ள கம்ப்யூட்டரில் இந்த தீர்வினைப் பார்க்கவில்லை என்றால், தீர்வினை ஒரு சிடி அல்லது ப்ளாஷ் ட்ரைவில் பதிந்து, பின்னர், அதனை பிரச்னைக்குரிய கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தலாம்.
-------------------------------------------------------

அடிக்கடி ஏதேனும் எர்ரர் மெசேஜ்கள் கிடைக்கின்றன. ஆனால் அதில் காட்டப்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் சுட்டிக் காட்டி தீர்வுகள் தரும் இணைய தளம் ஏதேனும் உள்ளதா?

கவலையே வேண்டாம். அந்த எர்ரர் மெசேஜினை அப்படியே காப்பி செய்து, இணையத்தில் கூகுள் அல்லது வேறு ஒரு தேடல் சாதனத்தில் பேஸ்ட் செய்து, தேடச் சொன்னால், இந்தப் பிரச்னை குறித்து தீர்வு தரும், ஒரு தளம் அல்ல, பல தளங்கள் பட்டியலில் கிடைக்கும். பதிலில் உள்ள சில வாக்கியங்களைப் படித்தால், எந்த தளத்தில் விரிவாக இந்தப் பிரச்னை ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வரும். இதன் அடிப்படையில், இணைய தளத்தினைத் தேர்ந்தெடுத்து தீர்வினைக் காணலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல