வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ட்ரேஸ் ரூட் (Traceroute) என்பது இணைய இணைப்பில் எந்த சாதனத்தைக் குறிக்கிறது?

Traceroute ஒரு சாதனம் அல்ல. இணைய இணைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு டூல். நெட்வொர்க் இயங்கும் தன்மை, அது குறித்த தகவல்களை, இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். இதன் பெயர் சொல்வது போல, இணைய இணைப்பில் டேட்டா பாக்கெட்கள் மேற்கொள்ளும் பயணம் குறித்து இது கண்டறிந்து நமக்கு தகவல்களாகக் கொடுக்கும்.

இந்த கட்டளை எந்த கம்ப்யூட்டரிலிருந்து கொடுக்கப்படுகிறதோ, அதிலிருந்து இணைப்பிற்கு அது இலக்கு வைக்கும் கம்ப்யூட்டர் வரையிலான டிஜிட்டல் பாதையில் ஏற்படும் பயண விபரங்களை இது தரும். தகவல் பாக்கெட்கள் பயணிக்கையில், ஒவ்வொரு நிலையிலும் அது செல்லும் தூரம், நெட்வொர்க் பயணத்தில் சந்திக்கும் வெவ்வேறு சாதனங்கள் ஆகியன இதன் மூலம் அறியப்படும்.

Ping கட்டளை மூலம் பயன்படுத்தப்படும் டூல், இதே போன்ற தகவல்களைத் தந்தாலும், இணைய இணைப்பின் மொத்த தூரத்தினை அறிவிக்கும் பணியோடு அது நின்றுவிடுகிறது. இரண்டு டூல்களும், நெட்வொர்க்கில் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் அணுகப்படுகிறதா அல்லது இணைப்பில் வருமா என்பதனை அறிவித்தாலும், ட்ரேஸ் ரூட் டூல், இணைப்பு கேட்கும் கம்ப்யூட்டரிலிருந்து, இணைப்பு நாடும் கம்ப்யூட்டர் வரையிலான பாதையில், எந்த இடத்தில் இணைப்பு வேகம் குறைவாக உள்ளது அல்லது இணைப்பு ஏற்படுத்த முடியாமல் உள்ளது என்று காட்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல