ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

கனகாவை சாகடிப்பதில் முண்டியடித்த ஊடகங்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார் இது தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் மட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வானொலிச்சேவைகள், பத்திரிகைகளிலும்; வெளியாகிபரபரப்பை ஏற்படுத்திய செய்தி.



இதில் வழமைபோல நாங்கள்தான் இதனை முந்தித் தந்தோம் என்று கூட சில இலங்கை வானொலிகள் அறிவித்தன.

ஆனால், இச்செய்தி வெளியான மறுநாளே நடிகை கனகா, தான் நலமாக உள்ள தாகவும், ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருவதாகவும் ஊடகங்களுக்கு அதிரடிப் பேட்டியளித்தார்.

தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், தன் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார், என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டார்.

இணையம், / பேஸ்புக் என்பனவெல்லாம் செய்திக்கான மூலங்களாக மாறிய பின்னர், யார் செய்திகளை முந்தித்தருவதென்கின்ற போட்டியில், மரணத்தைக் கூட அது உண்மையானதுதானா என்பதை ஆராய நேரமின்றியே பரபரப்புக்காகச் செய்தியாக்கும்; ஓர் அவல நிலையை நோக்கி ஊடகத்துறை பயணிப்பதுதான் வேதனை தருகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல