செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

மகனின் மரணத்தை காண விரும்பாத தாய் தற்கொலை!!! மகனும் மரணம்!!!!

மகனின் மரணத்தை காண விரும்பாத தாய் அதற்கு முன்னர் தற்கொலை செய்து உயிரை மாய்த்த சோகம் வடமராட்சியில் கட்டைவேலியில் இடம்பெற்று உள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சிப் பிரமுகர்களில் ஒருவரும், பருத்தித்துறை மேலதிக காணிப் பதிவாளருமான கந்தசாமி இளங்கீரன் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மரண நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்.

இவரை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்திய நிலையில் மகனின் மரணம் மிக நெருங்கி விட்டது என உணர்ந்த தாய் பஞ்சாட்சரம்மா மனமுடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்தார். தொடர்ந்து மகனும் இறந்து போனார்.

இத்துயர சம்பவம் வடமராட்சியை நெகிழ வைத்து உள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ரங்கன் தோழர் நேரில் சென்று அஞ்சலிகள் செலுத்தினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல