செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பட்டுச்சேலையை பராமரிப்பது எப்படி?

விலை அதி­க­மா­னாலும் அதை கருத்­திற்­கொள்­ளாமல் அதிகம் விலை கொடுத்து வாங்கி அழ­காக உடுத்தி அழகு பார்க்கும் நமக்கு அதை பாது­காப்­பாக பரா­ம­ரிக்­கவும் தெரிந்து இருக்க வேண்டும். விசே­ஷங்­க­ளுக்கு அணிந்து சென்று வந்­த­வுடன் பட்டுச்­சே­லையை களைந்து உடனே மடித்து வைக்­க­கூ­டாது. அது சரி­யான முறை அல்ல.

காற்­றோட்­ட­மான நிழலில் இர ண்டு மற்றும் மூன்று மணி நேரம் உலர விட வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு கைகளால் தேய்த்து அழுத்தி மடித்து வைக்க வேண்டும். 

எக்­கா­ரணம் கொண்டும் பட்­டு­ச்சே­லையை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்­க­கூ­டாது. சோப்போ அல்­லது சோப்பு பவு­டரோ உப­யோ­கித்து துவைக்க கூடாது. வெறும் தண்­ணீரில் பட்­டுச்­சே­லையை அல­சினால் போதும்.

பட்­டுச்­சே­லையில் ஏதா­வது கறை பட்­டு­விட்டால் சோப் பவுடர் உப­யோ­கப்­ப­டுத்­தாமல் என்­கி­றீர்­களா? அதற்கும் வழிகள் உள்­ளன. ஏதா­வது கறை பட்­டு­விட்டால் உடனே தண்­ணீரில் அல­ச­வேண்டும்.

எண்ணெய் கறை­யாக இருந்தால் அந்த இட த்தில் மட்டும் விபூ­தியை தடவி பத்து நிமி­டங் கள் வைத்து விட்டு பின்னர் அலச வேண்டும். பட்டு புட­வை­களை வரு­டக்­க­ணக்கில் தண்­ணீரில் நனைக்­காமல் வைத்­தி­ருக்­கவும் கூடாது.

மூன்று மாதத்­திற்கு ஒரு முறை­யா­வது தண்­ணீரில் அலசி நிழலில் உல­ர­விட்டு ஸ்திரி செய்து வைக்க வேண்டும்.

ஸ்திரி செய்யும் போது ஜரி­கையை திருப்பி அதன் மேல் மெல்­லிய துணி விரித்து ஸ்திரி செய்ய வேண்டும். நேர­டி­யாக ஸ்திரி செய்­யக்­கூ­டாது. பட்­டுச்­சே­லையை கடையில் இருந்து வாங்கி வந்தபடி அட்டை பெட்டியில் வைக்காமல் துணிபையில் வைக்கலாம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல