உலகிலேயே இரைப்பை அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்ட வயது குறைந்தவர் என்ற பெயரை சவூதி அரேபியாவைச் சேர்ந்த பருமனான 2 வயது பாலகன் பெறுகிறான்.
70 இறாத்தல் நிறையைக் கொண்ட இந்த பாலகன் உறங்கும் போது கடுமையான சுவாச பிரச்சினைகளுக்கு உள்ளானதையடுத்தே அவனுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி பாலகன் 14 மாத குழந்தையாக இருக்கும் போது முதன்முதலாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான் . அப்போது அவனது நிறை 46 இறாத்தலாக இருந்தது.
இதனையடுத்து அந்த சிறுவனது நிறையை குறைப்பதற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவனது நிறை 4 மாதங்களில் 56 இறாத்தலாக உயர்ந்தது.
அவனது நிறையைக் குறைப்பதற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து, அவனுக்கு இரைப்பை அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவனது வயிற்றின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
அந்த பாலகனுக்கு சவூதியின் றியாத் நகரிலுள்ள மருத்துவமனையில் இரைப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக